Mice In Laddu Packet Viral Video: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதத்தில் லட்டு பிரசாதத்தை தயாரிக்கப்பட்ட பயன்படுத்த நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலந்திருப்பதாக ஆய்வு முடிவில் தகவல் வெளியானது. இதனால், நாடு முழுவதும் பக்தர்கள் இடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில், அரசியல் ரீதியாகவும் பரபரப்பு உண்டாகி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது ஒருபுறம் இருக்க, திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் மற்றும் சிகரெட் துண்டு இருந்ததாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், இந்த கூற்று முற்றிலும் போலியானது எனவும் குட்கா பாக்கெட் எதுவும் பிரசாதத்தில் இருந்து கண்டெடுக்கப்படவில்லை என திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் லட்டு தயாரிக்கும் இடத்தை 24x7 நேரமும் கேமரா மூலம் கண்காணிக்கிறோம் என்றும் பக்தர்கள் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 


பரபரப்பை கிளப்பும் பிரசாதங்கள்


இதைபோல், பழனி முருகன் கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டதாக பிரபல இயக்குநர் மோகன் ஜி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியிருந்தார். இந்துக்களின் ஆண்மையை குறைக்கும் விதத்தில் இது செய்யப்பட்டதாக மோகன் ஜி கூறியிருந்த நிலையில், அவரை திருச்சி காவலர்கள் இன்று கைது செய்தனர்.


மேலும் படிக்க | கோபக்கார சிங்கத்தின் அப்பாவி முகம்! இவ்வளவு அப்பாவியா இருந்தா சிங்கம் மேல இருக்க பயமே போயிடும்! வைரல் வீடியோ...


திருப்பதி லட்டு பிரச்னையொட்டி இதுபோன்ற பல விஷயங்கள் சமூக வலைதளத்தில் பரவும் நிலையில், தற்போது மும்பை சித்தி விநாயகர் கோயிலில் (Mumbai Siddhivinayak Temple) வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் பாக்கெட்டில் எலி குஞ்சுகள் இருந்ததாக கூறி, புகைப்படமும் வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், இதுகுறித்த உண்மைத் தன்மையை இங்கு காணலாம். 


எலி குஞ்சுக்கள் இருக்கும் வீடியோ வைரல் 


வைரலாகி வரும் இந்த புகைப்படங்களிலும், வீடியோவிலும் ஒரு பிரிக்கப்பட்ட பிரசாத பாக்கெட்டின் உள்ளே சில எலி குஞ்சுகள் இருப்பதை காண முடிகிறது. இந்நிலையில், இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ குறித்து மும்பை சித்தி விநாயகர் கோயில் நிர்வாகத்தினர் இன்று மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளனர்.