கொரோனா வைரஸ் மக்கள் மீது ஒரு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது அன்றாட கூலித் தொழிலாளர்களுக்கு மிகவும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை கடும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரயிலில் பயணிக்கும் போது ஏதோ ஒரு காரணத்திற்காக உணவை வீசுவதைக் காணலாம். இந்த வீடியோ உண்மையில் ரயிலில் இருந்து படம் பிடிக்கப்பட்டது. இந்த வீடியோவில், காவலர்கள் ரயில் நிலையத்தில் நிற்பதைக் காணலாம். மேலும் இந்த வீடியோவில் தொழிலாளிகள் உணவு பொட்டலங்களை நடைமேடையில் வீசுவதையும் நாம் காணலாம்.


இந்த வீடியோவைப் பார்ப்பதன் மூலம், தவறு தொழிலாளர்களிடம்தான் உள்ளது என்று சொல்ல முடியாது, ஏனெனில் அதில் சில தொழிலாளர்கள் நாங்கள் சாப்பிட ஒரு பார்சலை கூட பெறவில்லை என்றும், அரசாங்கம் எங்களுக்கு உதவவில்லை என்றும் கூச்சலிடுகிறார்கள். மற்றும் வீடியோவில், தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்புவதையும் காணலாம். 



நடை மேடையில் உணவு கிடக்கும் விதம் சில தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலங்கள். தங்கள் உடன் பயணிக்கும் பலருக்கு உணவு அளிக்கப்படாததை எதிர்த்து அவர்கள் அதை எறிந்துள்ளனர்.


இந்த விஷயத்தில் இரு தரப்பு மீதும் குற்றம் உள்ளது, ஒரு புறத்தில் மக்கள் கொடுக்கப்பட்ட உணவுகளை வீசுகின்றனர். அதே நேரத்தில் அங்கு நிற்கும் காவல்துறையினர் எதுவும் செய்ய முடியாமல் நிற்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, சில தொழிலாளர்கள் தங்களுக்கு உணவு இல்லாததை தெரியப்படுத்தும் விதமாக வீடியோக்களை உருவாக்கியுள்ளனர்.


இந்த நேரத்தில் இந்த தீவிரமான சூழ்நிலையை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும், அது தொழிலாளர்களாக இருந்தாலும் நிர்வாகமாக இருந்தாலும் சரி. இது நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டிய காலம், எனவே இதுபோன்ற ஒத்துழைப்பு செய்யப்படுமானால் அது தவறான முன் உதாரணமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.