நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப்பின் உருவ சிலை சாலையில் வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு சிறிய அளவிலான ட்ரம்ப் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையில் "என்மீது சிறுநீர் கழிக்கவும்" என்ற வாசகம் எழுதப்பட்டிருப்பது பாதசாரிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


இந்தச் சிலையை பில் கேப்லே என்பவர் வடிவமைத்துள்ளார். ட்ரம்ப் ஒரு சிறந்த அதிபராக செயல்படவில்லை, அந்த ஆத்திரத்தில்தான் இப்படி ஒரு சிலையை வடிவமைத்து சாலையின் நடுவே வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 



முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலின் போது குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிட்டதை எதிர்த்து பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது கவனத்தை ஈர்ப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் அனார்சிஸ்ட் என்ற நிறுவனம் ட்ரம்ப்பை போல ஐந்து நிர்வாண சிலைகளை தயாரித்து காட்சிப்படுத்தி இருந்தது குறிப்பிடதக்கது.