இந்த வயதிலும் மாறாத பவுலிங் ஸ்டைல்... வைரலாகும் இர்பானின் Video!
சாலை பாதுகாப்பு உலகத் தொடரின் மூன்றாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படத்திய கைப் மற்றும் இர்பான் பதானின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சாலை பாதுகாப்பு உலகத் தொடரின் மூன்றாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படத்திய கைப் மற்றும் இர்பான் பதானின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மும்பையில் நடந்த சாலை பாதுகாப்பு உலகத் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான அணி முதலில் பந்துவீச துவங்கியது.
காரணம் ஆட்டத்தில் பனியின் தாக்கம் தங்களுக்கு சாதகமாக அமையும் என அவர் நினைத்தார். இதனையடுத்து களமிறங்கிய இலங்கை தொடக்க ஆட்டக்காரர்களான தில்லகரத்ன தில்ஷன் மற்றும் ரோமேஷ் கலுவிதாரன ஆகியோருக்கு இறுக்கமான தோல்வியை ஏற்படுத்தியதால் பந்து வீச்சாளர்கள் கேப்டன் முடிவை மெய்பித்தனர்.
பவர் பிளே ஓவர்களைக் கண்ட பிறகு, தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் தோள்களைத் திறக்க முடிவு செய்தனர், ஆனால் இது இலங்கைக்கு எந்த ஒரு பலனையும் அளிக்கவில்லை என்றே கூறவேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவித்த இலங்கை லெஜண்ட்ஸ் அணியில் அதிகபட்சமாக அணித்தலைவர் தில்ஷன் 23(23) மற்றும் சம்மர கப்புகேத்ரா 23(17) ரன்கள் குவித்தனர். இந்தியா லெஜண்ட்ஸ் அணி தரப்பில் முனாப் பட்டேல் நான்கு விக்கெட்டுகளை குவித்தார். ஜகிர்கான், இர்பான் பதான், மன்ப்ரிட் கோனி மற்றும் சஞ்சய் பங்கர் தலா 1 விக்கெட் குவித்தனர்.
இதனையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியன் லெஜண்ட்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சச்சின் 0(2), சேவாக் 3(5) ரன்களில் வெளியேறினர். என்றபோதிலும் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய மொகமது கைப் அதிரடியாக விளையாடி 46(45) ரன்கள் குவித்தார். இவரைத்தொடர்ந்து வந்த இர்பான் பதான் இறுதிவரை நின்று விளையாடி 31 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதனயடுத்து ஆட்டத்தின் 18.4-வது பந்தில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்து இந்தியன் லெஜண்ட்ஸ் அணி வெற்றி வாகை சூடியது.
இதனிடையே போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படத்திய கைப் மற்றும் இர்பான் பதானின் போட்டியின் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகின்றன. அன்றும் இன்றும் வீரர்களின் திறன் மட்டும் மாறவில்லை என ரசிகர்கள் இணையத்தில் அவர்களது வீடியோக்களை பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.