வைரல் வீடியோ: விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குரங்குகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். குரங்குகள் இந்த கிரகத்தின் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகும். குரங்கிலிருந்து மனிதர்களாகிய நாம் வந்தோம். குரங்குகள் பல சமயம் மனிதர்களைப் போலவே செயல்படுவதை பார்த்துள்ளோம். மனிதர்களின் குழந்தைகளுக்கும் குரங்குகளின் குட்டிகளுக்கும் பல ஒற்றுமைகளை காண முடியும். இரண்டுக்கும், பல வித விஷயங்களில் நாட்டமும், நினைத்ததை நடத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவலும் மிக அதிகமாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது போன்ற ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு குரங்கும் ஒரு குட்டி பெண்ணும் மொபைல் போனுக்காக சண்டையிடும் வீடியோதான் அது. சிறுமியுடன் அமர்ந்திருக்கும் குரங்கை பார்த்தால், பார்ப்பவர்களுக்கு எந்த வேற்றுமையும் தெரியவில்லை. அந்த சிறுமியுடன் அவரது நண்பர்கள் யாரோ அமர்ந்திருப்பது போல, எந்த வித அச்சமும் இல்லாமல் சிறுமி மிக கூலாக அமர்ந்திருக்கிறார்.


வீடுகளில் சகோத சகோதரிகளுக்கு இடையே நடக்கும் சண்டை போலதான் இந்த வீடியோவில் நடக்கும் விஷயமும் இருக்கிறது. வீடியோவில் சிறுமியும் குரங்கும் மொபைல் போனுக்காக சண்டை இடுவதை காண முடிகின்றது. 


மேலும் படிக்க | படுத்தும் குட்டி, பாசத்தோடு பசியாற்றும் அம்மா குரங்கு: செம கியூட்டான வைரல் வீடியோ 


வீட்டின் முற்றத்தில் ஒரு சோபாவில் ஒரு சிறுமி அமர்ந்திருப்பதை வீடியோவில் காண்கிறோம். அவரது கையில் மொபைல் போன் ஒன்று இருக்கிறது. அவர் அதில் எதையோ பார்த்துக்கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் ஒரு குரங்கு அவரிடம் வந்து போனை பிடுங்கி மிக மும்முரமாக போனை பார்க்கத் தொடங்குகிறது. போனை பார்ப்பதில் குரங்கு காட்டும் ஆர்வம் நம்மையும் ஆச்சரியப்பட வைக்கிறது.


குரங்கு போனை பார்க்கும்போது அதற்கு சிறுமி காட்டும் ரியாக்ஷன் இன்னும் மாஸாக இருக்கிறது. தன்னிடம் போனை பிடுங்கிய குரங்கை கோவத்துடன் பார்த்த சிறுமி, குரங்கின் தலையை நகர்த்தி, போனை பிடுங்குகிறார். ஆனால், அடுத்த நிமிடமே குரங்கு சிறுமியிடமிருந்து மீண்டும் போனை பறித்துக்கொள்கிறது. மொபைல் போனுக்காக குரங்கும், குழந்தையும் சண்டை போடும் வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


அந்த கியூட்டான வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் jagadeesh_madineni என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இந்த வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ஏகப்பட்ட வியூஸ்களையும் 1.4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதை மிகவும் ரசித்து வருகின்றனர். 


இதற்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். ஒரு பயனர், "இது எனது போன். திரும்பக் கொடு" என்று குழந்தை கூறுவது போல் கூறியுள்ளார். "தொலைபேசி குழந்தைகளுக்கானது அல்ல" என்று மற்றொருவர் எழுதியுள்ளார்.  "போன் மோகம் குரங்குகளையும் விட்டு வைக்கவில்லையா" என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | புலியை ஏமாற்றி விழ வைத்த கில்லாடி குரங்கு: வயிறு குலுங்க சிரிக்கும் நெட்டிசன்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ