குரங்கு கையால் ஆப்பிள் சாப்பிடும் ஆமை: நெகிழவைக்கும் வைரல் வீடியோ
குரங்கு கையால் ஆமை ஒன்று ஆப்பிள் சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. குரங்கு ஊட்டிவிட ஆமை வாங்கி சாப்பிடும் வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.
பாசம், அரவணைப்புகள் எல்லாம் மனிதர்களிடம் மட்டுமே இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தால் தவறு. மனிதர்களைக் காட்டிலும் விலங்குகளிடம் அதனை நீங்கள் அதிகம் எதிர்பார்க்கலாம். வீட்டில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளிடம் நீங்கள் அதிகம் உணர்ந்திருக்கக்கூடும். ஆனால், காடுகளில் வசிக்கும் விலங்குகளுக்கும் தோழமைகள் உண்டு. அவைகளும் ஒன்றுக்கொன்று நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளும். நாம் அதனை பெரும்பாலும் பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லை. அரிதினும் அரிதாக யாரேனும் கண்களில்பட்டு, அவர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டால் மட்டுமே நமக்கெல்லாம் தெரியவரும்.
மேலும் படிக்க | Viral Video: மின்னல் வேகத்தில் பாய்ந்து இரையை துல்லியமாக பிடிக்கும் சிறுத்தை!
அப்படியான ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் அருகருகே அமர்ந்திருக்கும் இரண்டு மனித குரங்களுடன் ஒரு ஆமையும் இருக்கிறது. அந்த குரங்குகள் தங்கள் கையில் இருக்கும் ஆப்பிள் பழத்தை சாப்பிடும்போது, அருகில் இருக்கும் ஆமைக்கும் ஊட்டி விடுகின்றன. ஆமையும் அழகாக ஆப்பிளை மெதுவாக கடித்து உண்ணுகிறது. ஆமை சாப்பிட்டபிறகு குரங்கு அந்த ஆப்பிளை சாப்பிடுகிறது.
விலங்குகளின் இந்த நட்பை பார்க்கும்போது, மெய்சிலிர்க்க வைக்கிறது. யூடிபில் மட்டும் இந்த வீடியோ 5 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த வீடியோவுக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், குரங்கு மற்றும் ஆமையின் நட்பு மனிதர்களுக்கே எடுத்துக்காட்டாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். டெக்னாலஜி காலத்தில் உறவுகளுக்கான முக்கியத்துவதும் குறைந்து இருக்கும் இந்த காலத்தில், உறவின் அருமையை இந்த வீடியோ கண்முன்னே உணர்த்துவதாகவும் கூறியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ