இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியின் மகள் ஜிவா தனது அழகான மழலை குரலில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை வாஸ்கோட ஸ்டேடியத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3_வது டி-20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதை கொண்டாடும் விதமாக  சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பட் மகேந்திர சிங் தோனி சக வீரர்களுடன் மைதானத்தில் வலம் வந்தார். 


இதனை தொடர்ந்தும் எம்.எஸ் தோனியின் மகள் ஜிவா பேசிய ஒரு ஒரு வீடியோவானது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், எம்.எஸ் தோனி மற்றும் ஜீவா ஒரு காரில் உட்கார்ந்து இருக்கிறார்கள். ஜீவா தன் தந்தையின் மடியில் அமர்ந்துக் கொண்டு பாடுகிறாள். தனது அழகான மழலை குரலில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.