3 வயது தமிழக சிறுவனை சந்தித்து வாழ்த்து கூறிய ‘தல’ தோனி
மிக இளம் வயது கிரிக்கெட் வீரர் பட்டம் வென்ற தமிழக சிறுவனை சந்தித்து வாழ்த்து கூறினார் எம்.எஸ்.தோனி.
தூக்கி போடும் பந்து உட்பட எதையும் சிக்சராக விளாசும் திறமை கொண்டவர் தான் சென்னையைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் சனுஷ் சூர்ய தேவ். இவரின் இந்த திறமையை பாராட்டி மிக இளம் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை கிடைத்ததுடன், இந்திய சாதனைப்புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.
இந்த சிறுவனின் திறமையை அறிந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மற்றும் முன்னால் இந்திய கேப்டனுமான எம்.எஸ்.தோனி, சிறுவன் மற்றும் அவரது பெற்றோரையை நேரில் சந்தித்தார் வாழ்த்து கூறினார். சிறுவனின் பேட்டிங் திறமையை பாராட்டிய தல தோனி, எதிர்காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
தோனியின் இந்த செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது.