கேப்டன் எம்.எஸ்.தோனி, ஒரு புகைப்படத்தை தனது ரசிகர்களுக்கு பகிர்ந்து, ஒரு நல்ல விஷயத்திற்கான கோரிக்கையை முன்வைத்தார். அந்த புகைப்படத்தில், தோனி ஒரு சிவப்பு சட்டையில் போஸ் கொடுக்கிறார். அவருக்கு அருகில் உள்ள மரத்தாலான பலகையில், “PLANT TREES SAVE FORESTS” என்று எழுதப்பட்டுள்ளது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி சமீபத்தில் தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஷிவா ஆகியோருடன் ஹிமாசல பிரதேசத்தில் ஓய்வு எடுத்தார். அங்குக் லாக்டவுனில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்ட பிறகு, முன்னாள் இந்திய கேப்டன் சிம்லாவுக்கு சென்றார். விடுமுறையை கழித்த தோனி, அவரது மனைவி சாக்ஷி மற்றும் 6 வயது மகள் ஜிவாவின் பல புகைப்படங்கள் சமூக ஊடக தளங்களில் வைரலாகின.


சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ்.தோனி தனது  புகைப்படத்தை வெள்ளிக்கிழமை (ஜூன் 25), சமூக ஊடகங்களில் பகிர்ந்து, ஒரு நல்ல விஷயத்திற்கான கோரிக்கையை முன்வைத்தார். அந்த புகைப்படத்தில், தோனி ஒரு சிவப்பு சட்டையில் போஸ் கொடுக்கிறார். அவருக்கு அருகில் உள்ள மரத்தாலான பலகையில், “PLANT TREES SAVE FORESTS” என்று எழுதப்பட்டுள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், சி.எஸ்.கே புகைப்படத்தை ""Planting the right thoughts! Thala #WhistlePodu #Yellove" என்ற ஹாஷ்டாக்-களுடன் அவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ஆனால், சில ட்விட்டர் பயனர்கள் தோனியை இந்த புகைப்படத்திற்காக ட்ரோல் செய்தனர். மரத்தாலான பலகையில் இந்த செய்தியை எழுதி, மரத்தை நடுங்கள், வனத்தை பாதுகாப்போம் என்று செய்தி சொல்வது சரியா என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.  



சிம்லாவில் தோனி தங்கியிருந்த ரிசார்ட், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் தோனிக்கு எழுப்பப்படும் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. மர ஆலைகளால் கழிவுகளாக ஒதுக்கப்படும் பொருட்களைக் கொண்டே மரத்தாலான பலகை உருவாக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மரப்பலகையை உருவாக்க, எந்த மரமும் அழிக்கப்படவில்லை என்று அந்த ரிசார்ட் தெளிவுபடுத்தியுள்ளது.  



இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 இன் 14 வது பதிப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை, புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு அழைத்துச் சென்றார் தோனி. இந்த ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டி 20 லீக் (T20 League) மீண்டும் தொடங்கவிருக்கிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் COVID-19 பாதிப்பு அதிகமாக இருந்ததால் ஐபிஎல் 2021 மே மாதத்தில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Also Read | WTC தோல்விக்குப் பிறகு ட்விட்டரில் துவங்கிய புதிய விவாதம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR