மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் மகேந்திர சிங் டோனி தாவி பிடித்த கேட்ச் ஒன்று, பாகிஸ்தான் அணி தலைவர் சர்ப்ரஸ் அகமது பிடித்த கேட்ச் போல் இருப்பதாக இணையத்தில் வைரலாகி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக கோப்பை தொடர் 2019-ன் 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியல் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. சற்று நிதானமாக விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக விராட் கோலி 72(82) ரன்கள் குவித்தார். MS டோனி இறுதிவரை ஆட்டமிழகாமல் 56*(61) ரன்களும், ராகுல் 48(64), ஹார்திக் பாண்டயா 46(38) ரன்களும் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். 


மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் கேமர் ரோச் 3 விக்கெட் வீழ்த்தினார். செல்டன் கேட்ரல், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆரம்பம் முதலே சரிவை கண்டு வந்த மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டத்தில் 34.2-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 


143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்த மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகப்பட்சமாக சுனில் அம்பிரஸ் 31(40) ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் மொகமது சமி 4 விக்கெட் வீழ்த்தினார். பூம்ரா, சாஹல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.



இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மகேந்திர சிங் டோனி, ஆட்டத்தின் 27-வது ஓவரில் பிடித்த கேட்ச் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆகாயத்தில் பறந்து அவர் பிடித்த கேட்ச், முந்தைய நாளில் நியுசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சர்ப்ரஸ் அகமது பிடித்த கேட்ச் போல் இருந்தது. இந்நிலையிலும் இருவரது கேட்சிலும் சிறந்த கேட்ச் எது என்னும் விவாதம் அத்தருணம் முதல் இணையத்தில் துவங்கிவிட்டது. இந்தி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி விட்டது.