மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒரவர், தனது காரில் Brake என என்னி Accelerator-யை மிதித்ததால் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிதாக கார் ஓட்டக் கற்றுக்கொண்ட மும்பை இளம்பெண் ஒருவர், கார் ஓட்டும்போது கட்டுப்பாட்டினை இழந்து தடுமாறியதில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


கடந்த ஜூன் 19-ஆம் நாள் மும்பை தாராவியின் 90 அடி சாலையில் நடைப்பெற்ற விபத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட இந்த 19-வயது இளம்பெண் சட்டக் கல்லூரி மாணவராக பயின்று வருகின்றார்.


சம்பவத்தன்று தனது தோழிகள் இருவருடன் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற இவர், வழியில் ஏற்பட்ட டிராபிக் ஜாம் காரணமாக தனது காரினை நிறுத்த முற்பட்டு வண்டியின் ப்ரேக்கினை மிதிக்க முயற்சித்துள்ளார். ஆனால் எதிர்பாரா விதமாக அவர் பிரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்துள்ளார். இதனால் சீறிபாய்ந்த வாகனம் எதிரில் இருந்த மக்களை தும்சம் செய்தது. இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 8 படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.



பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் இருக்கும் சியோன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட இளைம்பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல்துறை அதிகாரி ரத்திஷ் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.