வந்தே மாதரம் சொல்லாத முஸ்லிம் ஆசிரியருக்கு சரமாரியாக அடி உதை விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார் மாநிலம் காதீர் மாவட்டம் அப்துல்லாபூர் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் அப்சல் உசைன் என்பவர் ஆங்கில ஆசிரியராகவும், உருது ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். 


சமீபத்தில் குடியரசு தினத்தன்று கொடியேற்றும் நிகழ்ச்சி இந்த பள்ளியில் நடைபெற்றது. கொடி ஏற்றும் , மாணவர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும்  வந்தே மாதரம் என கூறினர். ஆனால், ஆசிரியர் அப்சல் உசைன் வந்தே மாதம் சொல்லாமல் புறக்கணித்தார். 


இதைக்கண்ட அக்கிராமத்தினர்கள் ஆசிரியர் அப்சல் உசைனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆசிரியர் உசைன்,  நாங்கள் அல்லாவின் மீது நம்பிக்கை வைத்து உள்ளோம். வந்தே மாதரம் எங்கள் நம்பிக்கைக்கு எதிரானது என்று தெரிவித்தார்.