Video: இந்தோனேசியா நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்குதல்!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
இந்தோனேசியாவில் இன்று நிகழ்ந்த பலமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 என்று பதிவாகியுள்ள நிலையில், சுலாவேசி என்ற தீவில் உள்ள பாலு என்ற இடத்தில் சுனாமி தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சுனாமி தாக்குதல் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வீடியோவில் கடல் அலைகள் 6 அடி உயரத்துக்கு எழும்பி சாலையில் உள்ள பொருட்களை அடித்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதுவரை 400-க்கும் அதிகமானோர் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 2004-ல் ஏற்பட்ட சுனாமியில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.