கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு மத்தியில் பொது இடங்களில் சுகாதாரம் பேனும் நடவடிக்கைகளை பல மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக மது கடைகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் 4 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மது கடைகளில் சமூக இடைவெளி பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒருவருக்கும் மற்றொருவருக்கும் 1 மீட்டர் இடைவெளி விட்டு வரும் வகையில் வரிசை அமைக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக கேரளாவில் கொண்டுவரப்பட்ட இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தற்போது தமிழகத்திலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


முன்னதாக கேரளாவில் சமூக இடைவெளியில் நின்று மதுபானம் வாங்கி சென்ற மக்களின் புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது தமிழகத்தில் சமூக இடைவெளியில் நின்று மதுபான பாட்டில்கள் வாங்கி செல்லும் நபர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.



இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 இறப்புகள் உள்பட 219 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் 163 இந்தியர்கள் மற்றும் 32 வெளிநாட்டவர் என 195 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். (04:36 PM 20-Mar-20 நிலவரப்படி)


COVID-19 உறுதிபடுத்தப்பட்ட வழக்குகள் (இந்தியா) உறுதிபடுத்தப்பட்ட வழக்குகள் (வெளிநாட்டவர்) முடிக்கப்பட்ட வழக்குகள் இறப்புகள்
உறுதிபடுத்தப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 163 32 20 4