‘கைலாசாவுக்கு சென்று வர 3 நாட்களுக்கான இலவச விசா!! உங்களுக்கு வேண்டுமென்றால் இன்றே விண்ணப்பிக்க மறக்காதீர்கள்’ ஆம்!! இதுதான் நித்யானந்தா அதிரடியாக வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாம் நம் வாழ்க்கையில் காணும் பலர் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள். தெளிவாக பேசுவது போல் தெரியும் அவர்களது பேச்சு எதுவும் உண்மையில் தெளிவாக இருப்பதில்லை. உண்மை என நாம் நம்பும் அவர்களது வாக்குகள் பல நேரங்களில் பல் இளித்து விடுகின்றன. நேர்த்தியானவர்கள் என நாம் எண்ணும் பலர் நேரத்திற்கேற்ப மாறுபவர்களாய் இருக்கிறார்கள்.


இப்படி பலருக்கும் ஒரு புரியாத புதிராய் இருந்து பல சர்ச்சைகளின் நாயகனாய் இருப்பவர்தான் நித்யானந்தா. கொலை வழக்கு, ஆட்கடத்தல், பாலியல் பகாத்காரம் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, தற்போது தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா (Nithyananda), எப்போது, எப்படி நாட்டை விட்டு சென்றார் என்பது ஒரு புதிர் என்றால், அவரை ஏன் யாராலும் போகாமல் நிறுத்த முடியவில்லை, இன்னும் பிடிக்க முடியவில்லை என்பது மற்றொரு பெரிய புதிராக உள்ளது.


இந்தியாவிலிருந்து (India) தப்பிச் சென்ற நித்யானந்தா, சமீபத்தில் தான் ‘கைலாசா’ என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கைலாசாவின் ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கி, தங்க நாணயங்கள், வாழ்கை முறை ஆகியவற்றைப் பற்றி பல வீடியோக்களையும் அறிவிப்புகளையும் அவர் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். விரைவிலேயே கைலாசா நாட்டுக்கான பாஸ்போர்ட் பற்றியும் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.


இந்த வீடியோக்களும் அறிவிப்புகளும் அவரது கைலாசா நாட்டின் பெயரிலும் அவர் பெயரிலும் வெளியிடப்பட்டாலும், இதில் மற்ற சிலரும் விளையாடுகிறார்கள் என்ற கருத்தும் வெளிவருகிறது. நித்யானந்தாவின் பெயரில் பல போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு பல போலி அறிக்கைகள் விடப்படுவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ: காலணா முதல் 10 காசு வரை.....கைலாசா நாணயங்களை வெளியிட்டார் நித்தியானந்தா


இந்த நிலையில், தற்போது, பொது மக்களுக்கான கைலாசா (Kailasa) பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசுவது போன்ற ஒரு வீடியொ வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவர், கைலாசா நாட்டிற்கு செல்ல ஆர்வம் உள்ளவர்களுக்காக இலவச விசாவை அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.


கைலாசா நாட்டிற்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால், அங்கிருந்து கைலாசாவின் ‘கருடா’ சிறுய விமானங்கள் மூலம் கைலாசாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். எந்தவித கட்டணமும் இன்றி 3 நாட்களுக்கான விசா (Visa) இலவசமாக வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


ஆஸ்திரேலியாவிலிருந்து (Australia) மட்டும்தான் இந்த சலுகை உள்ளதால், ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் சொந்த செலவில் ஆஸ்திரேலியா வரை வர வேண்டும். அதன் பிறகு, ஆஸ்திரேலியாவிலிருந்து கைலாசா செல்லும் செலவு, அங்கு மூன்று நாட்களுக்கான உணவு, இருப்பிடம், போக்குவரத்து செலவுகள் முதல், மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு வரும் செலவு வரை அனைத்தும் இலவசமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.


ஒருவருக்கு மூன்று நாட்களுக்கான விசா மட்டுமே வழங்கப்படும். அதற்கு மேல் கைலாசாவில் தங்க அனுமதி கிடைக்காது. கைலாசாவில் சிவ பக்தியில் ஆழ்ந்திருக்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கவும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


ALSO READ: விக்கிப்பீடியாவைப் போல தான் நித்தியானந்தப்பீடியா என்று அறைகூவும் நித்தியானந்தா....


ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் முழு விவரங்களோடு contact@kailaasa.org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR