ஒரிசா மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அரசியல் வாழ்வில் வெறுத்து மீண்டும் மாணவராக புத்துணர்வு பெற்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரிசாவை சேர்ந்த 80 வயது மூத்த அரசியல்வாதி நாராயண் சாஹூ. இரண்டு முறை ஒரிசா சட்டபேரவை உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது அரசியல் வாழ்வில் பிடிமானம் அற்று, மீண்டும் தனது கல்வியை தொடரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.


கடந்த 1963-ஆம் ஆண்டு ராவென்டி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்ற சாஹூ, பின்னர் அரசியலில் பிஸியாக வலம் வந்தார். இதற்கிடையில் கடந்த 2009-ஆம் ஆண்டு(கிட்டத்தட்ட 46) வருடங்கள் கழித்து உத்கல் பல்கலைகழகத்தில் தனது பட்ட மேற்படிப்பினை முடித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2012-ஆம் ஆண்டு Mphil பட்டம் பெற்றார். இத்துடன் நின்று விடாமல் தற்போது அவர் முனைவர் பட்டத்திற்கான படிப்பினை ஒரிசாவின் உத்கல் பல்கலை கழகத்தில் பயின்று வருகின்றார்.



சாஹூ-வின் கல்லூரி காலத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு பட்ட மேற்படிப்பு தடுக்கப்பட்டதாகவும், சாஹூ அதே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரால் மேற்படிப்பை தொடர முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது சகமாணவர்களுடன் கல்லூரி வகுப்பறைக்கு சென்று பயின்று வரும் சாஹூ, அப்பகுதியில் மூத்த வயது ஹீரோவாக வளம் வருகின்றார்.


மாணவர்களுடன் மாணவராய் விடுதியில் தங்கி பயிலும் இவருக்கு தற்போது பல இளம் வயது மாணவர்கள் தோழர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.