ரஜினி-யின் Petta திரைப்பட Ullaallaa பாடல் வெளியானது...
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள `உல்லாலா` பாடலின் லிரிக்கெல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'உல்லாலா' பாடலின் லிரிக்கெல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைத்துருக்கிறார் அனிருத்.
பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியிட்டுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதிகாரப்பூர்வ தகவகள் வெளியாகவில்லை.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'உல்லாலா' என்னும் பாடலின் லிரிக்கெல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முன்னதாக 'மரண மாஸ்' என்னும் பாடலினை படக்குழுவின் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இப்பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுத, நக்காஷ் அஜீஷ், இன்னோ கெங்கா பாடியுள்ளனர். இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்துள்ளார். இப்பாடல் ரஜின் ரசிகர்களுக்கு இசை விருந்தாய் அமையும் என்பதில் ஐயம் இல்லை.