நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் பிளிம்ஸ் மற்றும் டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தின் firstLook போஸ்டரினை படக்குழுவினர் கடந்த நவம்பர் 6-ஆம் நாள் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலானது.


FirstLook போஸ்டர் வெளியான நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.



நடிகர் விக்ரமின் 56-வது படமான இப்படத்தில், கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.


'கடாரம் கொண்டான்' என்றால் என்ன?.....


தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் - திரிபுவனமா தேவி தம்பதியருக்கு மகனாய் பிறந்தவர் ராஜேந்திர சோழன். இவரது ஆட்சிக்காலமான கி.பி. 1012- 1044 காலக்கட்டத்தில் கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவருக்கு 'கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது.


தற்போது வெளியாகியுள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர், படத்தின் திரைக்கதை கடல் கடந்து வெற்றிகொள்ளும் நாயகனின் கதையாக இருக்கும் என தெரிவிக்கின்றது.