நடிகர் அஜித் குமார் சமூக வலதளத்தில் இணைவது குறித்து செய்திகள் வெளியான நிலையில் தான் சமூக வலதளங்களில் இணையவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் அஜித் குமார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக நடிகர் அஜித்குமார் தான் சமூக ஊடக பங்கங்களில் இணைய இருப்பதாக ஒரு போலி அறிக்கை வெளியானது. இந்த அறிக்கை அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. 


பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது., “என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூகவலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது." என குறிப்பிடப்பட்டு இருந்தது.


இந்நிலையில் இந்த அறிக்கையானது போலி அறிக்கை என குறித்து நடிகர் அஜித் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. 


Pic Courtesy : twitter/@SureshChandraa

Pic Courtesy : twitter/@SureshChandraa

மேலும் இந்த அறிக்கையில் நடிகர் அஜித்தின் கையொப்பத்தை கொண்டு போலி அறிக்கை வெளியிட்ட நபரின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.