சுதீப் கிஷான் நடிப்பில் கண்ணாடி திரைப்பட ட்ரைலர் வெளியானது!

சுதீப் கிஷான் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான ‘கண்ணாடி’ திரைப்படத்தின் ட்ரைலரினை நடிகை அமலா பால் வெளியிட்டுள்ளார்!
சுதீப் கிஷான் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான ‘கண்ணாடி’ திரைப்படத்தின் ட்ரைலரினை நடிகை அமலா பால் வெளியிட்டுள்ளார்!
திருடன் போலீஸ், உள்குத்து போன்ற திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் கார்த்திக் ராஜு. இவர் அடுத்ததாக 'கண்ணாடி' எனும் த்ரில்லர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சுதீப் கிஷான் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அன்யா சிங் நடித்துள்ளார்.
கருணாகரன், ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 12-ந் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரினை நடிகை அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.