கர்பம் குறித்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் நடிகை சமந்தா!
தனது கர்பம் குறித்து வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை சமந்தா!!
தனது கர்பம் குறித்து வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை சமந்தா!!
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் அக்டோபர் 6, 2017 அன்று கோவாவில் இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைப்பெற்றது.
தொடர்ந்து கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் பிஸியாக வலம் வரும் சமந்தா கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இது குறித்து வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சமந்தா நான் கர்ப்பமாக இருக்கேனா? எப்போது அதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் எங்களுக்கும் சொல்லுங்கள் என காமெடியாக பதில் கொடுத்துள்ளார்.
மேலும், தனது ட்விட்டரில், சமந்தா ‘பேபி அக்கினேனி’ எனப் பெயரை மாற்றியிருப்பது, அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை கிளப்பியிருந்த நிலையில், தான் நடிக்கும் ’ஓ பேபி’ படத்தை புரோமோட் செய்வதற்காகத்தான் ட்விட்டரில் பெயர் மாற்றம் செய்திருக்கிறார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.