Viral Video Latest: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த அக்.31ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளி அன்று இனிப்புகளை பலகாரங்களை உண்பது, பட்டாசுகளை வெடிப்பது என வெவ்வேறு விதமான கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர். தீபாவளிக்கும் முன்னும் தீபாவளிக்கு பின்னும் மக்கள் சில சம்பிரதாயங்களை பின்பற்றுவார்கள். அதிலும் தீபாவளிக்கு முன்னர் வீடுகளை சுத்தம் செய்வதும் மக்களிடம் நீண்ட கால பழக்கவழக்கமாக இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது தீபாவளியை முன்னிட்டு வீட்டில் தேங்கியிருக்கும் பழைய பொருள்களை, தேவையற்ற பொருள்களை வெளியேற்ற இந்த பழக்கவழக்கம் முக்கிய காரணமாக இருக்கும். பழைய பொருள்களை வெளியேற்றுவதால் தீபாவளிக்கு பலரும் புதிய பொருள்களை வாங்குவோம். இது சம்பிரதாயமாக இல்லாமல் ஒரு நல்ல பழக்கமாகவும் நாம் பார்க்கலாம். தேவையில்லாத பொருள்களை வெளியேற்றுவதை போன்று தேவையற்ற எண்ணங்களையும், பழமைவாத சிந்தனையையும் வெளியேற்றி வெள்ளை தாளாக மனதை வைத்துக்கொள்வதும் இதை போலவே சிறந்த பழக்கமாக இருக்கும்.


இது ஒருபுறம் இருக்க, நாம் தீபாவளியை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்தால் பழைய காசுகள், நாம் பள்ளிக்கூடத்தில் படித்த புத்தகங்கள், மறைத்து வைத்த லவ் லெட்டர்கள் போன்றவைதான் கண்ணுக்கு படும். ஆனால், இங்கு தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்த ஒரு பெண்மணிக்கு கட்டுக்கட்டாக பணம் சிக்கியுள்ளது. இதுகுறித்து தற்போது ஒரு வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. ஆனால் அதில்தான் பெரிய ட்விஸ்ட்டே இருக்கிறது. அந்த பெண்மணிக்கு கிடைத்தது பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள்.


மேலும் படிக்க | ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அந்த நபரையே சுட்டுத்தள்ளிய நபர்!! திக் திக் சிசிடிவி காட்சிகள்..


எப்போதோ அந்த பெண்மணி 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை கணவனுக்கு தெரியாமல் மறைத்துவைத்த நிலையில் அது இந்த தீபாவளிக்கு கிடைத்ததாக அவர் ஆச்சர்யத்துடன் பகிர்ந்துள்ளார். தற்போது அதனை வங்கியில் கொடுத்தும் மாற்ற முடியாது என்பதால் வருத்தமாக இருப்பதாகவும் அந்த பெண்மணி பதிவிட்டுள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவை இதுவரை 2 கோடிக்கும் மேல் வியூஸை பெற்றுள்ளது. 



Deepti Gaba என்ற இன்ஸ்டாகிராம் (Instagram Viral Video) பயனர் இந்த வீடியோவை கடந்த ஆறு நாள்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த வீடியோ எங்கு, எப்போது, யாரால் எடுக்கப்பட்டது என்பது குறித்த உறுதியான தகவல் ஏதும் தெரியவில்லை. இந்த பக்கத்தில் இதுவரை 2,652 பதிவுகள் பதிவேற்றப்பட்டுள்ளன. சுமார் 61 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலோயர்ஸ் இந்த பக்கத்திற்கு உள்ளது. இந்த வீடியோ தற்போது நெட்டிசன்களிடம் நகைச்சுவையாக பகிரப்பட்டு வருகிறது. 


பலரும் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர். பலரும் நாங்களும் உடனே தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்து எங்காவது பணம் இருக்கிறது என பார்க்கிறோம் என்றும் பதிவிட்டு வருகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு பணமதிப்பிழப்பு செய்தது. மேலும், 2000 ரூபாய் நோட்டையும், புதிய 500 ரூபாய் நோட்டையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 


மேலும் படிக்க | நடுரோட்டில் தந்தை - மகள் செய்த சாகசம்! அடுத்து என்ன ஆனது என்று பாருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ