வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீப காலங்களில் முதியவர்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கலக்கி வருகின்றன. வயதானாலும் சிலருக்கு குழந்தைத்தனமும், வாழ்க்கையின் மீதுள்ள ஆர்வமும் குறையவில்லை என்பதை இந்த வீடியோக்களின் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது. தற்போதும் முதியவர்கள் தொடர்பான ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. இதைப் பார்த்தால் கண்டிப்பாக யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. திருமணம் ஒன்றில் இளைஞர்களுடன் சேர்ந்து தூளாக நடனமாடும் ஒரு முதியவரின் வீடியோ இது. 


பாட்டியை பார்த்து ஓடிய தாத்தா 


இந்த வீடியோவில், ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள வந்துள்ள விருந்தினர்கள் திறந்த மைதானம் ஒன்றில் டிஜே இசைக்கு நடமாடிக்கொண்டிர்ப்பதைக் காண முடிகின்றது. அப்போது அங்கு வந்த ஒரு முதியவரும் இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடத் தொடங்குகிறார். அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உல்லாசமாக நடனமாடுகிறார். 


மேலும் படிக்க | பார்த்தா அழுதுடுவீங்க: காசை எண்ணி இதயங்களை உருக வைக்கும் முதியவரின் வைரல் வீடியோ 


சிறிது நேரம் கழித்து, அவருடைய மனைவி ஒரு கொம்புடன் அவரை நோக்கி வருகிறார். தாத்தா பாட்டியை பார்த்த உடனேயே டென்ஷன் ஆகி விடுகிறார். அதன் பிறகு அவர் செய்யும் காரியம் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கின்றது. 



ஓடியே போன தாத்தா: பாட்டி மீது அத்தனை பயமா? 


ஒரு வயதான தம்பதியின் இந்த வேடிக்கை வீடியோ, இன்ஸ்டாகிராமில் memewalanews என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். ஒரு பயனர், ‘பாட்டி கடைக்கு போக சொன்னா, தாத்தா டான்ஸ் ஆடிட்டு இருந்திருக்காரு.. அதான் இப்படி’ என விளக்கியுள்ளார். ‘பார்த்து வயிறு குலுங்க சிரித்தேன்’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 


மேலும் படிக்க | ‘ஏம்மா...ஆவி கீவி புகுந்துடுச்சா?’: சமையலறையில் பெண் ஆடிய பேய் நடனம், வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ