வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டு வைரல் ஆகின்றன. சில மிகவும் வேடிக்கையானவையாகவும் சில மிகவும் ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. தாங்கள் செய்யும் வித்தியாசமான செயல்களையோ அல்லது தங்களை சுற்றி மற்றவர்கள் செய்யும் வித்தியாசமான செயல்களையோ வீடியோ எடுத்து இணையத்தில் பகிரும் ஆவல் இந்த நாட்களில் பலரிடம் காணப்படுகின்றது. வியூஸ்கள், லைக்குகள் மற்றும் ஷேர்களுக்கான ஆசை தீரா மோகமாக மாறி விட்டது என்றே கூறலாம். 


சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. இது மிகவும் வேடிக்கையாக உள்ளது. இந்த வீடியோவை பார்த்து யாராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. வைரலான இந்த வீடியோவில், ஒரு முதியவருக்கும் வாக்யூம் கிளீனருக்கும் இடையில் நடக்கும் காமெடி கலாட்டாவை பார்க்க முடிகின்றது. 


இந்த வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. ஒரு முதியவர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பதை வீடியோவின் துவக்கத்தில் காண முடிகின்றது. அப்போது ஒருவர் திடீரென அவரது வாயின் அருகில் ஒரு வாக்யூம் கிளீனரை கொண்டு வருகிறார். முதியவர் அதிலிருந்து வரும் காற்றை தவிர்க்க முயற்சிக்கத் தொடங்குகிறார். அப்போது ​​முதியவரின் முகத்தின் தோலும் வாக்யூம் கிளீனரை நோக்கி இழுக்கப்படுவது போல் தெரிகிறது. ஆனால் முதியவர் வாயைத் திறக்கும்போதுதான் உண்மையான வேடிக்கை நடக்கிறது.


மேலும் படிக்க | Viral Video: புலிக்கு தண்ணி காட்டிய கில்லாடி வாத்து!


வாக்யூம் கிளீனரின் அழுத்தத்திற்கு ஆளான முதியவர் வாயைத் திறந்தவுடன், வாக்யூம் கிளீனர் அவரது வாயில் இருந்த பல் செட்டை இழுத்து விடுகிறது. பல் செட் பறந்து செல்கிறது. அந்த முதியவரின் மேல் பகுதியில் இருந்த செட் முழுவதுமால பறந்து வந்து மேஜையின் மீது விழுகிறது. 


வேடிக்கையான அந்த வீடியோவை இங்கே காணலாம்:



இணையத்தில் வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @Enezator என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இதை பலர் வேடிக்கையாக எடுத்துக்கொண்டாலும், இது போன்ற செயல்களில் உள்ள ஆபத்துகளையும் சிலர் விளக்கியுள்ளனர். சிலர் அந்த முதியவரின் தைரியத்தை பாராட்டியுள்ளார்கள், சிலரோ இந்த வயதில் இது தேவையா என கேள்வி எழுப்பியுள்ளார்கள். இது அந்த முதியவரின் சருமத்திற்கும் முகத்திற்கும் ஆபத்தை விளைவித்திருக்கலாம். வீடியோ எடுக்கும் மோகத்தில் இவற்றை மக்கள் மறந்து விடக்கூடாது. 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | ஷப்பா.. என்னா வேல!! குரங்கு செய்யும் வேலைகள்... ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ