வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதிலும் மாணவர்களின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. ஏனெனில் மாணவர்களின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இது போன்ற வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி மாணவர்களின் காதல் கதை தொடர்புடையதாகத் தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோயை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். வீடியோவை பார்க்கும் போது வகுப்பறையில் சிறுமி ஒருவர் கையில் பேக் வைத்து நின்று இருப்பதை நாம் காணலாம். அப்போது அங்கிருந்த ஒரு மாணவன் அந்த மாணவியை ப்ரபோஸ் செய்ய முயற்சிக்கிறான். இந்த காட்சியை அங்கிருந்த மாணவர்கள் தங்களின் தொலைபேசியில் வீடியோவாக எடுத்திருக்கின்றனர். 


மேலும் படிக்க | சீண்டிய இளைஞர்களை வெச்சி செஞ்ச பெண்: பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ


இந்த வீடியோவை இறுதி வரை பார்க்கும் போது மாணவன் தான் காதலிக்கும் மாணவியை ப்ரபோஸ் செய்ய எப்படி தயங்குகிறான் என்பதை பார்க்கலாம். ப்ரோபோஸ் செய்வதற்கு முன் அந்த மாணவிக்கு ரோஜா பூவை கொடுக்க அந்த மாணவன் விரும்புவது வீடியோவில் தெரிகிறது. ஆனால் மாணவியை நோக்கி பூவை நீட்டியவுடன், அந்த மாணவி பயங்கரமாக கோபமடைந்து ரோஜா பூவை தூக்கி எரிந்து விடுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதை வீடியோவில் நீங்கள் காணுங்கள்.



தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ gharkekaleshh என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்களும் பல வித நெகட்டிவ் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 'ஹாய்.. என் கூட பேசுவியா?’: பூச்சியுடன் பேசும் குழந்தை.. வைரலாகும் செம கியூட் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ