வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு சடங்குகளுடன் திருமணங்கள் நடக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமண சடங்குகளில் முக்கியமான ஒன்று மாலை மாற்றும் சடங்காகும். இதில் மணமகளும் மணமகனும் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக்கொள்கின்றனர். அதன் பின்னர் சில இடங்களில் இனிப்புகளை பரிமாற்றிக்கொள்ளும் சடங்கும் உள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. சமீபத்தில் வெளியான இந்த வீடியோவில், மணமகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் லட்டு ஊட்டிக்கொள்ளும்படி அங்கு உள்ள உறவினர்கள் கூறுகிறார்கள். அப்போதுதான் பிரச்சனை தொடங்குகிறது. 


மேலும் படிக்க | ஆசையாய் வந்த கணவன், வெச்சி செஞ்ச மனைவி: வைரல் வீடியோ


தம்பதிகள் இனிப்புகளை ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ள தயாராகிறார்கள். முதலில் மணமகள் மணமகனுக்கு இனிப்பை ஊட்டுகிறார். ஆனால், மாப்பிள்ளைக்கு இனிப்பு சாப்பிடும் எண்ணமே இருப்பது போல தோன்றவில்லை. இனிப்பை சாப்பிடும்படி மணமகனை வலியுறுத்தும் மணமகள் பின்னர் அதை அவருக்கு வலுக்கட்டாயமாக ஊட்டுகிறார். இதனால் கோபமடைந்த மணமகன் மணமகளின் கையை தள்ளி விடுகிறார்.


பின்னர், மணமகன் மணமகளுக்கு இனிப்பை அளிக்க முற்படுகிறார். அப்போது மணமகளும் அதை சாப்பிடாமல் அடம் பிடிக்க, மணமகன் அவர் வாயில் இனிப்பை திணிக்கிறார். இதனால், கோபமடைந்த மணமகள் மேடையில், அனைவருக்கும் முன்னால் மணமகனை அறைந்து விடுகிறார். வைரலான இந்த வீடியோவை நிரஞ்சன் மஹாபத்ரா என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் போஸ்டில் இதற்கான தலைப்பில், ‘இந்த காலத்தில் மேடையில் அடிப்பது ஃபாஷனாகி உள்ளது’ என்று எழுதியுள்ளார். 


வேற லெவலில் சண்டையிட்ட மணமகளின் வீடியோவை இங்கே காணலாம்: