சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு நாளும் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். தற்போது சமூக வலைதளங்களில் இது போன்ற ஒரு காட்சி வைரலாக பரவி வருகிறது. அதில் முதியவர் ஒருவர் இளம் பெண்ணை திருமணம் செய்திருப்பதை வீடியோவில் நீங்கள் காணலாம். அதேபோல் அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட முதியவருக்கு சந்தோஷம் தாங்க முடியாமல் சிரித்துக்கொண்டே இருப்பதையும் நாம் இந்த வீடியோவில் காணலாம். மேலும் இந்த வீடியோ வெளியானவுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாத்தா திருமணத்தில் மகிழ்ச்சி
வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணமான பிறகு, தாத்தா தனது மணப்பெண்ணுடன் விருந்தினர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்வதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இந்த நேரத்தில் அவர் முகத்தில் மகிழ்ச்சி மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கிறது. அந்தப் பெண் அமைதியாக உட்கார்ந்திருக்கிறாள், அவள் இந்த திருமணத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்று அவளுடைய சைகையிலிருந்து தெரிகிறது. அதே சமயம் வயதான அந்த தாத்தா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை நாம் காணலாம். அத்துடன் இந்த ஜோடிகளின் திருமணத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்


தாத்தாவின் இந்த செயல் வீடியோ வைரல்: வீடியோவை இங்கே பாருங்கள்:



இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ மிகவும் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. மேலும் வயதான முதியவருடன் இளம்பெண் திருமணம் செய்துகொண்டதை கண்டு நெட்டிசன்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் நெட்டிசன்கள் தொடர்ந்து வீடியோவில் பலவித கமெண்ட்கள் மற்றும் ரியாக்சன்களை வழங்கி வருகின்றனர். இதுவரை இந்த வீடியோ காட்சி பல மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது, மேலும் பலர் இந்த வீடியோவுக்கு லைக் செய்து வருகின்றனர். அத்துடன் இந்த திருமண வீடியோ  psycho_biihari என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்க்கும்போது இது ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வீடியோவைப் போல் தெரிகிறது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.