மாப்பிள்ளைக்கு கிஸ் கொடுத்த மச்சினிச்சி: ஷாக் ஆன மணமகளின் வைரல் வீடியோ
Funny Wedding Video: மணமேடையில் பலர் பார்க்க மணமகளின் சகோதரி மணமகனுக்கு முத்தம் கொடுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு சடங்குகளுடன் திருமணங்கள் நடக்கின்றன.
திருமணம் நடக்கும் இடத்தில் சூழல் பல வித உணர்வுகளால் நிறைந்திருக்கும். திருமணங்களில் மணமகன் அல்லது மணமகளின் தோழிகள் தோழர்கள், மணமக்களின் சகோதர சகோதரிகள் என பலர் கிண்ட கேலிகளில் ஈடுபடுவதுண்டு. தற்போது மணமகளின் சகோதரி தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | 'ஆரம்பமே இப்படியா?' சொதப்பிய மணமகன், கடுப்பான மணமகள்: வைரல் வீடியோ
மாலை மாற்றும் சடங்குக்குப் பிறகு மணமக்கள் திருமண மேட்டையில் நாற்காலியில் அமர்ந்திருப்பது வீடியோவில் தெரிகிறது. அப்போது மணமகளின் சகோதரிகள் மணமகனுக்கு இனிப்பு வழங்கும் சடங்கு நடக்கிறது. மணமகளின் பல சகோதரிகள் மணமகனுக்கு இனிப்பு வழங்க வருகிறார்கள். அப்போது நடக்கும் ஒரு சம்பவம் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்துகிறது.
தவறுதலாக கிஸ் செய்தார்
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் மணமக்கள் இடையே மாலை மாற்றும் சடங்கு முடிந்து இருவரும் ரிலாக்சாக மணமேடையில் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அப்போதுதான் பல பெண்கள் மேடைக்கு வருகிறார்கள். அவர்களில் ஒருவர் மணமகனுக்கு இனிப்புகளை ஊட்ட விரும்புகிறார். இனிப்புகளை ஊட்ட அவர் மணமகன் அருகில் செல்லும்போது, தவறி விழுந்து மணமகனை முத்தமிட்டு விடுகிறார். இதை பார்த்து அங்கிருந்த அனைவரும் சிரிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால், இது மணமகளுக்கு பிடிக்கவில்லை என்பதை அவரது முகமே காட்டிக்கொடுக்கிறது.
திருமணத்தில் நடந்த வேடிக்கையை இந்த வீடியோவில் காணலாம்:
மாப்பிள்ளையும் சிரித்தார்
இனிப்பு வழங்க வந்த தனது மைத்துனி தவறுதலாக தடுக்கி விழுந்து தனக்கு முத்தம் கொட்த்ததை உணர்ந்த மணமகனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. திருமணம் தொடர்பான இந்த வித்தியாசமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது bhutni_ke_memes என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
மேலும் படிக்க | மனைவியின் ஓவர் பாசம், சிக்கி சின்னாபின்னமான கணவன்: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ