வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் தினம் தினம் பல விசித்திரமான சம்பவங்களை பார்க்கிறோம். இவற்றில் பல சம்பவங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துவதுடன் அதியசிக்கவும் வைக்கின்றன. சில விடியோக்களை பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியாது. இப்படிப்பட்ட வீடியோக்களுக்கு ரசிகர் பட்டாளமும் அதிகம் இருக்கும்.


அப்படி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு காகம் செய்யும் மிக வினோதமான ஒரு செயலை காண முடிகின்றது. ஒரு காகம் இப்படி செய்யும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி என்னதான் செய்தது காகம் என கேட்கிறீர்களா? ரூபாய் நோட்டை திருடியது!! ஆம், ஆச்சரியமாக இருந்தாலும் அதுதான் உண்மை. 


ஒரு காகம் ரூபாய் நோட்டை திடுடி ஒரு வீட்டிற்கு எடுத்து வரும் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. இப்பறவை அடிக்கடி இந்த குற்றத்தை செய்வதையும் நீண்ட நாட்களாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதும் இன்னும் ஆச்சரியம் அளிக்கின்றது. அந்த வீடியோவில், ஒரு வீட்டிற்குள் ஒரு பறவை தனது மூக்கில் சில கரன்சி நோட்டுகளை எடுத்துக்கொண்டு பறந்து வருவதை காண முடிகின்றது. 


காகம் ஏராளமான கரன்சி நோட்டுகளை திருடிச்சென்றுள்ளது


காகம் ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே வந்து நேரடியாக ஒரு டிராயருக்கு அருகில் நின்று சில நொடிகள் காத்திருக்கிறது. பின்னர் டிராயர் திறக்கப்பட்டவுடன் அதில் இந்த நோட்டை காகம் போடுகின்றது. டிராயருகுள் இன்னும் ஏராளமான கரன்சி நோட்டுகள் தென்படுகின்றன. பறவை டிராயரின் மேல் குதித்து அதன் உள்ளே கரன்சி நோட்டுகளை போடுகிறது. இதற்கிடையில், ஒரு நாய் டிராயரின் அருகே வந்து டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எடுத்துக்கொள்கிறது. இந்த வீடியோவை பார்த்தால், அந்த பறவை இப்படி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது என்பதும், மீதமுள்ள நோட்டுகளையும் காகம்தான் போட்டுள்ளது என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. 


மேலும் படிக்க | ராஜ நாகத்துடன் மல்லுக்கு நின்று உடும்பு... சண்டையில் யாருக்கு வெற்றி - தெறிக்கும் வைரல் வீடியோ


வீடியோவில் தோன்றும் நாய் வங்கியில் இருக்கும் ஒரு கணக்காளர் போலவும் தெரிகிறது. வீடியோவைப் பார்க்கும்போது, ​​இந்த வீடியோ சீனாவைச் சேர்ந்தது என்று தெரிகிறது. ஏனெனில் பறவை சீன யுவானுடன் பறக்கிறது.


ரூபாய் நோட்டு திருடும் காகத்தின் வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


இந்த வீடியோவின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @ataharekat என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு  24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | Viral Video: குட்டிக்கு தில்ல பார்த்தியா... பாம்புகளை கட்டிப்பிடித்து தூங்கும் சிறுமி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ