மலைப்பாம்பை கயிறு போல இழுத்து விளையாடும் சிறுமியின் திகில் வீடியோ!
சிறுமி ஒருவர் எவ்வித பயமும் இல்லாமல் மலைப்பாம்பை தனது இரு கைகளாலும் பிடித்து இழுத்து விளையாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
'இளங்கன்று பயமறியாது' என்கிற பழமொழியை நாம் கேள்விபட்டிருப்போம், அதற்கு பொருள் இளம்பருவத்தில் இருக்கும் துடிப்பில் எதையும் கண்டும் அஞ்சமாட்டார்கள் என்பது தான். இந்த பழமொழிக்கேற்ப சிறுமி ஒருவர் மலைப்பாம்பை கைகளில் பிடித்து விளையாடும் திகிலான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று கேள்விப்பட்ட நமக்கு இந்த காட்சி கொஞ்சம் ஆச்சர்யமாகவும் அதேசமயம் மிகுந்த பயமாகவும் இருக்கின்றது, பொதுவாக பாம்பு இனங்களே விஷத்தன்மை கொண்டது, அதிலும் மலைப்பாம்புகள் விடிய விஷத்தன்மை வாய்ந்தது, அப்படி இருக்கையில் எவ்வித பயமுமின்றி அந்த குழந்தை பாம்பை பாடாய்படுத்துகிறது. இந்த திகிலான வீடியோவை பலரும் ஆர்வமாகவும், அதிர்ச்சியுடனும் பார்த்து வருகின்றனர்.
மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!
இன்ஸ்டாகிராமில் snakemasterexotics என்கிற கணக்கு பக்கத்தில் இந்த திகில் வீடியோ பகிரப்பட்டு இருக்கின்றது, அந்த வீடியோவில் அரியானா என்கிற ஒரு சிறுமி மலைப்பாம்புடன் விளையாடுகிறார், ஒரு பெரிய அறையில் அந்த சிறுமி அமர்ந்திருக்க எதையோ கையில் பிடித்து இழுப்பது போன்று தெரிகிறது, பின்னர் தான் தெரிகிறது அது ஒரு பெரிய மலைப்பாம்பு என்று, கருப்பு நிறத்தில் நீண்டு இருக்கும் அந்த மலைப்பாம்பின் வால் பகுதியை அந்த சிறுமி தனது இரு கைகளாலும் பிடித்து இழுக்கிறது. அந்த மலைப்பாம்பு அங்குள்ள கட்டிலின் அடிப்பகுதிக்குள் செல்ல முயன்று கொண்டு இருக்கிறது, இருப்பினும் அச்சிறுமி சிரித்துக்கொண்டே பாம்பை பிடித்து இழுத்துக்கொண்டு இருக்கிறாள். இதேபோல அந்த சிறுமி பலவிதமான பாம்புகளுடனும் விளையாடும் காட்சி அந்த பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.
பாம்பின் புகைப்படங்கள், வீடியோக்களை கண்டாலே நடுநடுங்கும் நமக்கு இந்த சிறுமி அசால்ட்டாக பாம்புடன் விளையாடுவது வியப்பாக இருக்கிறது. இந்த வீடியோவிற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது மற்றும் இதனை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஷாக்கானதாக கமெண்டு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | Viral Video: யானையின் ‘Cat Walk’; இணையவாசிகளை சொக்க வைத்த ஒய்யார நடை!