அங்க போகாத! சுற்றுலா பயணிகளிடமிருந்து குட்டியை காப்பாற்றும் தாய் யானை!
யானை ஒன்று சுற்றுலா பயணிகள் தனது குட்டியை நெருங்கிவிடாமல் இருக்க அதன் குட்டியை பத்திரமாக இறுக அணைத்துக்கொண்டு செல்கிற காட்சி இணையத்தில் பலரின் கவனங்களை ஈர்த்துள்ளது.
பொதுவாக ஒரு தாய் தனது குழந்தை அறிமுகமில்லாதவர்களிடம் நெருங்குவதை விரும்பமாட்டார்கள், சிறு வயதிலிருந்தே குழந்தைகளிடம் தெரியாதவர்களிடம் எதையும் வாங்கக்கூடாது, தெரியாதவர்கள் கூப்பிட்டால் போகக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்லி வளர்ப்பார்கள். அதேப்போல குழந்தைக்கு யாரேனும் இடையூறு ஏற்படுத்த முயன்றால் அவர்கள் காப்பாற்றவும் செய்வார்கள், தாயுடன் குழந்தை இருக்கும்போது மிகவும் பாதுக்காப்பாக இருக்கும். மனிதர்கள் மட்டும் தான் அவர்களது குழந்தை மீது அக்கறையுடன் இருப்பார்களா என்றால் இல்லை, தாய்மையடைந்த அனைத்து விலங்கினங்களுமே அதன் குழந்தை மீது அக்கறையாக இருக்கும் என்பதை தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ காண்பிக்கிறது.
மேலும் படிக்க | ஓவரா சீன் போட்ட மாப்பிள்ளை, மாமனார் செய்த அதிரடி வேலை: சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ
அந்த வீடியோவானது ட்விட்டரில் பைடெங்பைடேன் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது. அதில் யானை ஒன்று அதன் குட்டியுடன் சாலை பகுதிக்கு நடந்து வருகிறது, தாயும் குட்டியும் சேர்ந்து சாலையை கடக்கும்போது அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகள் சிலர் அந்த குட்டியானையை அழைக்கின்றனர். அவர்கள் அழைத்ததும் அந்த குட்டியானை அவர்களிடம் நெருங்க முற்படும்போது தெரியாதவர்களிடம் தனது குட்டியை நெருங்க அனுமதிக்கக்கூடாது என்கிற நோக்கத்தில் அந்த தாய் யானை அதன் குட்டியை தடுத்து நிறுத்தி பக்கத்தில் அழைத்து அரவணைத்து கொள்கிறது.
பின்னர் தனது குட்டியை அழைத்துக்கொண்டு சாலையை கடந்து செல்வதுடன் இந்த வீடியோ நிறைவடைகிறது. கடந்த மூன்றாம் தேதி ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவிற்கு இதுவரை பல லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.
மேலும் படிக்க | மணமகனுக்கு I LOVE YOU என்று கூறி முத்தமிட்ட மணமகள்: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ