நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!
பல அடி நீளமுள்ள நாகப்பாம்பை நிமிடங்களில் வேட்டையாடி உயிருடன் விழுங்கிய பாம்பின் வீடியோ, சமூகவலைத்தளங்களில் மிகவும் வரைலாகி வருகிறது.
சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும், நம்மை ஆச்சர்யத்தை கொடுக்கக் கூடிய அல்லது வியப்பை அளிக்கக் கூடிய, அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு , பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ராட்சத பாம்பின் வீடியோ சமூக ஊடக உலகில் மிகவும் வைரலாகியுள்ளது. பல அடி நீளமுள்ள நாகப்பாம்பை நிமிடங்களில் வேட்டையாடி உயிருடன் விழுங்கிய பாம்பின் வீடியோ, சமூகவலைத்தளங்களில் மிகவும் வரைலாகி வருகிறது.
நாகப்பாம்பின் புற்றுக்குள் நுழைந்து அதனை பிடித்து வெளியே இழுத்த காட்சியே மிகவும் திகிலூட்டுவதாக உள்ளது. புற்றை பார்த்த ராட்சத பாம்பு இரை தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதை வீடியோவில் காணலாம். பாம்பின் புற்றில் நுழைந்தவுடன், பல அடி நீளமுள்ள நாகப்பாம்பை உள்ளேயே தாக்கியது. நாகப்பாம்பு பதில் தாக்குதல் நடத்த முடியாமல், ராட்சத பாம்பு வாயில் சிக்கியது.
மேலும் படிக்க | Viral Video: அஸ்ஸாமில் சாலையை ஹாய்யாக கடந்து சென்ற பெரிய்ய்ய்ய மலைப்பாம்பு..!!
இரையைப் பிடித்த பிறகு, பாம்பு உடனடியாக அதை முறுக்க தொடங்கியதை வீடியோவில் காணலாம். இதன் காரணமாக நாகப்பாம்பு, ராட்சஸ பாம்பின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. அடுத்த நொடியே இரையை உயிருடன் புற்றின் வெளியே இழுத்து கொண்டு வந்தது. சிறிது நேரத்தில் நாகப்பாம்பை முழுமையாக விழுங்கியது.
வைரலான வீடியோவை இங்கே காணலாம்:
அந்த வீடியோ எப்போது, எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமிலும் snake._.world என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!
மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR