பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்ற உண்மையை ஏற்றுக்கொண்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRS) பாகிஸ்தான் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியுள்ளது. ஆனால் இந்த முறை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்ற உண்மையை ஏற்றுக்கொண்டார். 


ஜெனீவாவில் UNHRS-யின் 42 வது அமர்வின் போது காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, ஜம்மு-காஷ்மீர் இந்திய மாநிலம் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது அறிக்கையின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



காஷ்மீரில் ஐ.நா. தீர்மானங்கள் மீறப்படுவதாகவும், எனவே மனித உரிமை மீறல்கள் குறித்து UNHRS கவனம் செலுத்த வேண்டும் என்றும் குரேஷி கூறினார். இதற்காக கூட்டு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். 


ஷா மஹ்மூத் குரேஷி பத்திரிகைகளுடன் பேசியபோது, ​​'காஷ்மீரில் வாழ்க்கை மீண்டும் இயல்பானதாகிவிட்டது என்பதை இந்தியா உலகுக்குக் காட்ட விரும்புகிறது. அப்படியானால், ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச ஊடகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகங்களுக்கு, நிலைமையைக் காண இந்தியா ஏன் அனுமதிக்கவில்லை’ எனவும் கேள்வி எழுப்பினார்.