கராச்சி: நேற்று (செவ்வாய்) சவுதி அரேபியாவிலிருந்து முல்தான் சென்ற பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) விமானம் ஒன்றில் பாக்கிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாக்கிஸ்தான் சர்வதேச விமானம் PK716-ல் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானத்தில் பயணித்த கர்பிணி பெண் ஒருவருக்கு திடிரென பிரசவ வலி ஏற்பட விமானத்தின் பணியாளர்களின் உதவியோடு அச்சிறுகுழந்தை இந்த உலகை வந்தடைந்தது.


ஆரோக்கியமான நிலையில் பிறந்த அக்குழந்தைக்கு 'ஜன்னத்' என்று பெயரிட வேண்டும் என்று அவளுடைய பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.


இந்த நிகழ்வினை குறித்து பாக்கிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 



அந்த ட்விட்டர் பதிவில் அவர்கள் அக்குழந்தையினை குறித்து குறிப்பிட்டுள்ளதாவது... "நீல நிர சூழலுக்கு இடையில் தன் விழித்திறந்த தேவதை, எங்கள் விமானத்தில் கிடைத்த புது நண்பி இவள்" என பதிவிட்டுள்ளனர். மேலும் அக்குழந்தையின் புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளனர்.