குழந்தைகளை கடைவீதிக்கு அழைத்து செல்லும் பெற்றோர் அங்கு அவர்களின் சேட்டையை பார்க்காமல் இருக்க முடியாது. அமைதியாக வரும் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த ஒன்றை பார்த்துவிட்டால் போதும் அந்த இடத்தைவிட்டு துளியும் நகரமாட்டார்கள். அடம்பிடித்தாவது தங்களுக்கு பிடித்ததை வாங்கியே தீர வேண்டும் என்ற ஒற்றைக் காலில் நிற்பார்கள். அந்த சமயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் சிலர் வாங்கிக் கொடுப்பார்கள். சிலர் முடிந்தளவுக்கு குழந்தையை சமாதானம் செய்து அழைத்துவர பார்ப்பார்கள். இது எல்லா நேரத்திலும் கை கொடுக்குமா? என்றால் நிச்சயமாக இல்லை என்று கூறிவிடலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாம்புக்கும் நாய்க்கும் பயங்கர சண்டை: நம்ப முடியாத ட்விஸ்ட், வைரல் வீடியோ


பெற்றோர்கள் எந்த சூழலில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் குழந்தைகளுக்கு தெரியாது. அவர்களை பொறுத்தவரை விரும்பிய பொருட்கள் கட்டாயம் கிடைக்க வேண்டும். அதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் அடம்பிடிக்க தயாராக இருப்பார்கள். அப்படி செய்த குழந்தையை அம்மா ஒருவர் புத்திசாலித்தனமாக டீல் செய்யும் வீடியோ இணையவாசிகளை கவர்ந்திருக்கிறது. குழந்தையை கடைக்கு அழைத்துச் செல்லும்போது அங்கிருக்கும் பொம்மைகளை பார்த்து வேண்டும் என அடம்பிடிக்கிறது. ஆனால் வாங்கித் தருவதற்கு பெற்றோருக்கு விருப்பம் இல்லை.



என்ன செய்வதென இருவரும் ஸ்மார்டாக யோசிக்கின்றனர். தரையில் படுத்து அழும் குழந்தையை பார்த்த அம்மா, உடனே கணவரிடம் குழந்தைக்கு அருகில் சென்று படுக்குமாறு கூறுகிறார். அவரும் அப்படியே செய்ய, கணவரின் அருகில் சென்று கண்ணத்தில் பளார் என்று அறைந்து விடுகிறார். இதனைப் பார்த்த குழந்தை ஷாக்காகி உடனே அங்கிருந்து எழுந்து அம்மாவுடன் அமைதியாக செல்கிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இது புதிய டெக்னிக்காக இருக்கிறதே.. நாமும் அப்படியே ஃபாலோ பண்ணுவோம் என காமெடியாக கமெண்ட் அடித்துள்ளனர்.


மேலும் படிக்க | முதலையின் வாய்க்குள் சென்று உணவை திருடிய கில்லாடி பூனை: திக் திக் வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ