கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்ட சேவையில் ஈடுபட்டுள்ள கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல்துறையின் முன்னணி போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு உதவும் விதமாக 10000 முகமூடிகளை Paytm நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் ஷர்மா அனுப்பிவைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பான தகவலை கிரேட்டர் சென்னை போக்குவரத்து துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கைப்பிடிப்பில் தெரிவித்துள்ளது. மற்றும் தனது நன்றிகளையும் இந்த பதிவின் மூலம் கிரேட்டர் சென்னை போக்குவரத்து துறை தெரிவித்துக்கொண்டுள்ளது.


கொரோனா தடுப்பு பணியில் காவல்துறை, போக்குவரத்து துறை, மருத்துவ ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் என பலர் தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர். அவர்களுக்கும் உதவும் வகையில் தமிழக அரசு முன்னதாக சில அறிவிப்புகளை வெளியிட்டது, அதேப்போல் பிற மாநில அரசுகளும் ஊழியர்களுக்கான நலன் திட்டங்களை வெளியிட்டுள்ளது. இருப்பினும் அரசு உதவிகளை தவிற பில தனியார் நிறுவனங்களும் தங்கள் சார்பில் உதவிகளை செய்ய முன் வந்துள்ளன.



அந்த வகையில் இந்தியா நிறுவனமான Paytm, கொரோனா போராட்ட முதல் நிலை ஊழியர்களுக்கு உதவிகள் பல செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்ட சேவையில் ஈடுபட்டுள்ள கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல்துறையின் முன்னணி போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு உதவும் விதமாக 10000 முகமூடிகளை Paytm நிறுவனம் அளித்துள்ளது.


முன்னதாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை இந்த முழு அடைப்பு காலத்தில் எளிதாக பெறும் விதமாக தனது நிறுவனத்தின் கிளை வசதியான Paytm Mall-ல் புதிய அம்சத்தை இணைத்தது. அதாவது, Paytm Mall சமீபத்தில் 10,000 க்கும் மேற்பட்ட கிரானா, சிறு கடைகள் மற்றும் பிற வணிகங்களுடன் கூட்டுசேர்ந்துள்ளது. இது சிறு வணிகங்களை Paytm Mall இல் அத்தியாவசியங்களை விற்க அனுமதிப்பதன் மூலமும், அத்தியாவசிய தளவாட ஆதரவை வழங்குவதன் மூலமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறு கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவுவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டு இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் இந்த சிறிய கிரானாக்கள் மற்றும் கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எளிய முறையில் பிரச்சனைகள் இன்றி வழங்க உதவும் என நிறுவனம் நம்புகிறது.