பாம்புகளுக்கு கால்கள் இல்லாததால் அவை பூமியில் ஊர்ந்து செல்கின்றன.  அதனால் கரடுமுரடான உராய்வின் காரணமாக அதன் உடலில் அடிக்கடி சிராய்ப்புகள், காயங்கள் ஏற்படலாம். அதிலிருந்து பாதுகாக்கத் தான், இயற்கை பாம்புகளுக்கு வழவழப்பான செதில்கள் மற்றும் மெல்லிய தோலை இயற்கை கொடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எணினும் சில நாட்களுக்கு பின் தோல்பகுதி தன் பாதுகாப்புத் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுவதால், பாம்புகள் அதன் மேலடுக்குத்தோலை உரிந்தெடுத்து களைந்து விடுகின்றன. தனது பாதுகாப்பிற்காகவும், சௌகரியத்திற்காகவும் செய்யும் இந்த நிகழ்வையே ''பாம்பு சட்டை உரித்தல்'' என்று குறிப்பிடுகிறோம்.  பாம்பு சட்டை உரித்தலுக்கு, ஆங்கிலத்தில் Ecdysis என்று கூறுவர். 


பழைய தோலுக்குக்கீழேயே புதுத்தோல் வளர்ந்திருக்கும் நிலையில்,  தனது தோலை உரிப்பதற்கு முன் பாம்புகள் (Snake) தண்ணீரில் நீந்தும்.  பின் தன் மூக்கை ஒரு கடினமான பாறையிலோ அல்லது மரத்திலோ வைத்துத்தேய்க்கும் போது கிழியும். பின் பாம்பு அதன் பழைய தோலை விடுத்து லாவகமாக வெளியேறும். பாம்பின் உரித்த சட்டை பாம்பின் வடிவத்திலேயே  முழுவதுமாக இருந்தால் அது ஆரோக்கியமாக பாம்பு என்பது பொருள். மேலும் தோலில் ஒட்டிக் கொண்டுள்ள ஒட்டுண்ணிகளை அகற்றவும், பாம்பு சட்டையை உரிக்கும். 


ALSO READ: Viral Video: இணையவாசிகளை கவர்ந்த மலைப் பாம்பின் வீடியோ 


பாம்பு  சட்டை உரித்த படத்தை  பகிர்ந்துள்ள ஒரு வனத்துறை அதிகாரியின் பதிவு வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தில், பாம்பு உரித்த சட்டையை பார்க்கும் போது, அது பாம்பு படுத்திருப்பதை போலவே உள்ளது.  அவர் அந்த பதிவில், யாரோ எனது வீட்டில் தனது அடையை மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த 7.5 அடி பாம்பை நாங்களும் தொந்தரவு செய்வதில்லை. அதுவும் சமுக்க இடைவெளியை பின்பற்றுகிறது’ என குறிப்பிட்டுள்ளார். 



 


ALSO READ:Viral Video நீரில் பின்னிப்பிணைந்த பாம்புகள்: இது காதலா? கிரோதமா? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR