பள்ளி மாணவர்களின் உள்ளத்தை கவர்ந்த கேரளா IAS அதிகாரி!
கேரளா மாநிலத்தின் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர், பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு உண்ணும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன!
கேரளா மாநிலத்தின் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர், பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு உண்ணும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன!
கடந்த 20-ஆம் தேதி ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் திடீரென அரசு பள்ளிக்கு விஜயம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் அப்பள்ளி மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து, பள்ளியில் வழங்கும் மதிய உணவினை உண்டார். மதிய உணவினை குறித்த ஆய்விற்காக அவ்வாறு உண்டதாக அவர் விளக்கம் அளித்தார்.
இந்த விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளி மாணவர்களுடன் சரிசமமாக அமர்ந்து உணவு உண்ணும் கலக்டர் என்று நெட்டீசன்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர்.
முன்னதாக இவரது ஆய்வின் புகைப்படங்களை ஆட்சியரின் அதிகாரப்பூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டனர். இந்த பதிவானது இதுவரை 3500 பகிர்வுகளையும், 6500 லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.
இந்த பதிவின்படி ஆட்சியர் சுஹாஸ், ஸ்ரீ தேவி விஷாலம் அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அவரது பதிவின்படி பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவானது தரமானதாக இருந்தது என தகவல்கள் தெரவிக்கின்றன. ஆய்வின் ஒரு பகுதியா பள்ளியில் இருக்கும் கணினி ஆய்வறைக்கும், நூலகத்திற்கும் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.