ஜிம்முக்கு போன பிரதமர் மோடி - Viral Video
உத்தரப்பிரதேசதுக்கு சென்ற பிரதமர் மோடி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடியும் அடிக்கடி உத்தரப்பிரதேசத்துக்கு சென்று வருகிறார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுவதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டு வருகிறது.
ALSO READ | PM கிசான்: ரூ .4000 பெற கடைசி வாய்ப்பு; முழு விவரம் இங்கே
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீரட் சென்ற பிரதமர், மேஜர் தயானந்த் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த பல்கலைக்கழக்கம் நவீன மற்றும் மிகச்சிறந்த உட்கட்டமைப்புகளுடன் கட்டப்பட உள்ளது. இந்த விழாவுக்கு முன்பு அங்கு ஏற்கனவே இருக்கும் விளையாட்டு மைதானத்தையும், அங்கிருக்கும் உட்கட்டமைப்புகளையும் பார்வையிட்டார். அப்போது, உள்விளையாட்டு அரங்கில் இருந்த ஜிம்மை பார்வையிட்ட அவர், திடீரென வொர்க் அவுட் செய்ய ஆரம்பித்தார். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை.
ALSO READ | ALSO READ | PM Kisan Yojana: இலவசமாக கிசான் கிரெடிட் கார்டை எவ்வாறு பெறுவது!
அங்கிருந்தவர்களுக்கே வியப்பாக இருந்தது. பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். குறிப்பாக, யோகாவை சர்வதேச அளவில் பிரபலப்படுத்திய அவர், ஆண்டுதோறும் யோகா நாளையும் நாட்டு மக்களுடன் சேர்ந்து கடைபிடித்து வருகிறார். உத்தரப்பிரதேச தேர்தல் களம் மிகப் பரபரப்பாக இருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி கூலாக வொர்க் அவுட் செய்த வீடியோ, அம்மாநிலத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வைரலாக பரவியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR