#MeeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. இதில் பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் குறித்து புகார்களைக் கொடுத்து வருகிறார். தமிழ்நாட்டை பொருத்த வரை வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல அரசியல்வாதிகள் மற்றும் ஆன்மிகவாதிகள் மீதும் தொடர்ந்து பாலியல் புகார்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது #MeeToo மூலம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள்.


ஒரு மத்திய அமைச்சர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் குவிந்து வருவதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் பதவியை ராஜினமா உடனடியாக செய்யவேண்டும் காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து அழுத்தம் தரப்படுகிறது.


இந்நிலையில், பாஜக மாநிலங்களவை எம்.பி சுப்பிரமணியன் சுவாமி அவர்கள், எம்.ஜே. அக்பர் மீதான குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது, "#MeToo இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். நீண்ட நாட்கள் கழித்து இந்த இயக்கம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது ஒன்றும் தவறு இல்லை. எம்.ஜே. அக்பர் மீது ஒரு பெண்ணல்ல, பல பெண்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த விசியத்தில் பிரதமர் மோடி கண்டிப்பாக பேச வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.