கவர்ச்சி நடிகை மியா கலிஃபாவும், ராபர்ட் சாண்ட்பர்க் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படுபவர் சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருபவர். இவரை போன்று கவர்ச்சி நடிகை தான் மியா கலிஃபா. உலகளவில் பல லட்சம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை மியா கலிஃபா, தனது நடிப்பு தொழிலை விட்டு, விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணி புரிந்து வருகிறார். ஆனால், இன்னமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து கொண்டுதான் வருகிறார்.


இந்நிலையில், அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். இதுவரை சிங்கிளாக இருந்து வந்த மியா கலிஃபா, ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் திருமணம் நிச்சயம் ஆன செய்தியை இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்துள்ளார்.