கர்ஜனையால் காட்டை உலுக்கும் சிங்கம்: குரலால் அதிகாரம் செய்யும் காட்டு ராஜா
சிங்கத்தின் ஒரிஜினல் கர்ஜனையைக் கேட்டதுண்டா? சிங்கம் சிங்கிளா இருந்தாலும் மாஸ் என்பது புரியும்.
புதுடெல்லி: சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ என்ற பாடல் பிரசித்தமானதாக இருக்கலாம். சிங்கத்தின் சீற்றம் மட்டுமல்ல அதன் கர்ஜனையும் பிரபலமானது.
சிங்கத்தின் ஒரிஜினல் கர்ஜனையைக் கேட்டதுண்டா? கேட்டுத் தான் பாருங்கள்... சிங்கம் சிங்கிளா இருந்தாலும் மாஸ் என்பது புரியும். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நமக்கு ஆச்சரியம் அளிக்கின்றன.
சில பயத்தை அழிக்கின்றன, சில சிந்திக்க வைக்கின்றன, பல வீடியோக்கள் அதிர்ச்சியையும் சோகத்தையும் அதிகரிக்கின்றன.
மேலும் படிக்க | கட்டிப்புடி வைத்தியம் செய்யும் காதல் பாம்புகள்: வைரலாகும் பாம்புகளின் ரொமான்ஸ்
அதில் பல வித வினோத வீடியோக்கள், சமூக ஊடகங்களில் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது இணையத்தில் சிங்கத்தின் கர்ஜனை வீடியோ ஒன்று கலக்கி வருகிறது.
பொதுவாக பெரும்பாலான வீடியோக்களில், சிங்கம் மற்ற விலங்குகளை வேட்டையாடுவதைக் காண்கிறோம். ஆனால் இந்த வீடியோ, தனது சிம்மக்குரலால் காட்டையே அதிர வைக்கும் சிங்கத்தின் சீற்றத்தை காட்டும் காணொளியாக இருக்கிறது.
இந்த வீடியோவில் அமர்ந்திருக்கும் சிங்கம் ஒன்று கர்ஜிக்கிறது. அதற்கு அருகிலும் மற்றுமொரு சிங்கம் அமர்ந்திருக்கிறது. இந்த வீடியோவில் கேட்பது சிங்கத்தின் ஒரிஜினல் கர்ஜனை என்பது தெரிகிறது.
உண்மையில் இந்த வீடியோவை எடுத்தவருக்கு நிறைய தைரியம் இருந்திருக்க வேண்டும். பொதுவாக, ஒரு சிங்கம் தொடர்ந்து 45 முறை வரை கர்ஜிக்கும் என்று கூறபடுகிறது.
மேலும் படிக்க | இது பாம்புகளின் மரம் பிடிக்கும் சண்டை: வைரலாகும் ஆதிக்கப் போர்
அதுமட்டுமல்ல, சிங்கம், தன்னுடைய கர்ஜனை மூலம், காட்டில் தனது அதிகார எல்லையை நிர்ணயிக்கும் என்றும் நம்பப்படுகிறது. சிங்கத்தின் காட்டின் எல்லையை நிர்ணயிக்கும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
காட்டுக்கு ராஜா என்று அழைக்கப்படும் சிங்கம் காட்டு விலங்குகளிலேயே அதிக வலிமையுடையது. வலிமையில் மட்டுமல்ல, தனது குரலால் அதிரச் செய்யும் வலிமையான குரலையும் கொண்டுள்ளது சிங்கம்.
சிங்கத்தின் சிங்கிள் கர்ஜனை ஒலியே, பிற விலங்குகளை அதற்கு மண்டியிடச் செய்யும் என்பதை புரிய வைக்கும் சிங்கத்தின் சீற்றமான கர்ஜனை வீடியோ இது.
மேலும் படிக்க | சமையல்காரரின் கைவண்ணத்தில் வைரலாகும் பாம்பு வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR