திருமணத்திற்கு முந்தைய புகைப்பட ஷீட்டிங்கில் கலந்துக் கொண்ட ஜோடியும், அவர்களது நண்பர்களுக்கும் ஏற்பட்ட திகில் சம்பவம் இது. திருமணத்திற்கு முன்னதாகவே, மணமகளும், மணமகனும் திரைப்பட ஷீட்டிங் போல வெவ்வேறு ஸ்பாட்டுக்கு சென்று புகைப்படங்களை எடுத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படித்தான் இந்த ஜோடியும், புகைப்படக் கலைஞருடன் சென்ற ஜோடிகள் நீர்வீழ்ச்சியில் ஷீட்டிங் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளம் ஏற்பட்டதால், அவர்கள் நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருந்த பாறையில் இருந்து வர முடியாமல் சிக்கிக் கொண்டார்கள்.


செவ்வாய்கிழமையன்று ராஜஸ்தானைச் சேர்ந்த ஜோடி, சித்தோர்கரில் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் எடுக்கச் சென்றிருந்தனர். தண்ணீர் சூழ மாட்டிக் கொண்ட அவர்கள், சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டனர்.


Also Read | ஏம்மா.. உனக்கு விளையாட வேற ஆள் கிடைக்கலயா?


சித்தோர்கரில் உள்ள ராவத்பட்டா பகுதியில், சூலியா நீர்வீழ்ச்சியில் நடந்த வைரல் சம்பவம் இது.  ​புகைப்படக்காரர் எப்படியோ தப்பித்து வெளியே வந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையும் சிவில் பாதுகாப்புக் குழுவும் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு திருமண ஜோடியையும், அவர்களின் நண்பர்களையும் மீட்டனர்.  


"ராணா பிரதாப் சாகர் அணையின் கதவுகள் செவ்வாய்கிழமை காலை திறக்கப்பட்டன.  இது தெரியாமல், கோட்டாவைச் சேர்ந்த ஆஷிஷ் குப்தா (29) மற்றும் மணப்பெண் ஷிகா (27) ஆகியோர் திருமணத்திற்கான புகைப்படங்களை எடுக்க சூலியா நீர்வீழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். திருமண படப்பிடிப்புக்கு உதவி செய்வதற்காக தம்பதிகளுடன் அவர்களது நண்பர் ஹிமான்ஷு (22) மற்றும் மணப்பெண்ணின் உறவினர் மிலன் (18) உடன் இருந்தனர். அவர்கள் நான்கு பேரும் மீட்கப்பட்டனர்" என்று அப்பகுதியின் எஸ்ஹெச்ஓ ராஜாராம் குர்ஜார் கூறினார்.


தம்பதிகளும் அவர்களது நண்பர்களும் பாறைகளில் அமர்ந்து புகைப்படங்களைக் கிளிக் செய்து கொண்டிருந்தபோது, திடீரென நீர்மட்டம் உயரத் தொடங்கியது. பயந்துபோன புகைப்படக்காரர் அவர்களை தண்ணீரில் இருந்து வெளியே வரச் சொன்னார், புகைப்படக்காரர் எப்படியோ வெளியேறினார், ஆனால் அவரது கேமரா தண்ணீரில் விழுந்துவிட்டது. நான்கு பேரும் தண்ணீரின் பிரவாகத்தில் சிக்க் கொண்டனர். அங்கிருந்து தப்பித்து வெளியே வந்த புகைப்படக்காரர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.


Also Read | 12 அடி நீள ராஜ நாகப்பாம்பை காப்பாற்றிய வனத்துறையினர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR