சமீரா ரெட்டியின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சமீரா ரெட்டி. தற்போது இரண்டாம் முறையாக கருவுற்றுள்ள இவர் சமீபத்தில் தனது கவர்சிகரமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் பெரும் எரிப்பு அலை உண்டாகியுள்ளது.



கருவுற்று இருக்கும் நடிகைகள் அதை கவர்ச்சியாக படம் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. ஹாலிவுட் நடிகைகளை போல இந்திய நடிகைகளும் தற்போது இதை செய்ய தொடங்கிவிட்டனர்.



அந்த வகையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள சமீரா ரெட்டி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். 8 மாத கர்ப்பிணியான அவர் தனது 3 வயது மகன் மற்றும் கணவருடன் கோவாவுக்கு சென்றுள்ளார்.



அங்கு கடற்கரையோரம் புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த புகைப்படங்களை பார்த்த சிலர் அவரின் அழகை பாராட்டி இருந்தார்கள்.


எனினும் பலர் கர்ப்பிணியாக இருந்து கொண்டு இப்படி உடை அணிய வெட்கமாக இல்லையா, இப்படியா வயிற்றை காட்டுவது என்று கேட்டு இருந்தனர். சிலர் தன்னை விமர்சிப்பதை பார்த்த சமீரா ரெட்டி அவர்களுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்து, அவ்வாறே மேலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.