#MeToo விவகாரத்தில் பாலியல் புகாரில் வரும் பெயர்கள் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், சமூக வலைதளங்களில் #MeToo இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.


தற்போது தமிழக திரையுலக பிரபலங்கள் மீதும் #MeToo ஹாஸ்டேக் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை புகார்கள் பதியப்பட்டு வரும் நிலையில் பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரினை பதிவு செய்தார். தனக்கு 17 வயது இருக்கும் போது வைரமுத்து அலுவலகத்திற்கு தான் சென்று இருந்ததாகவும் அப்போது வைரமுத்து தன்னை கட்டி அணைத்து தவறாக நடக்க முயன்றதாகவும் சின்மயி புகார் கூறி இருந்தார். இதற்க்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த பாலியல் புகார் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. 


இந்நிலையில், #MeToo பிரட்சாரத்திர்க்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளர். அந்த ட்விட்டர் பதிவில், “பாலியல் புகாரில் சிக்கியவர்களின் பெயர்கள் தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சினிமா துறையில் நேர்மையும், பெண்களுக்கு மரியாதையும் இருக்கும் நிலையை காணவே நான் விரும்புகிறேன்.



பாலியல் புகார் தெரிவிப்பவர்களின் பெயர்களும், குற்றச்சாட்டுக்கு உள்ளாவோரின் பெயர்களும் அதிர்ச்சியை அளிக்கின்றது. சாதிக்க வருவோருக்கு எந்த இடையூறும் ஏற்படாத சூழலை உருவாக்க நானும், எனது குழுவினரும் உறுதியேற்றுள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் வெளியே பேசுவதற்காக மிகப்பெரிய சுதந்திரத்தை சமூக வலைதளம் கொடுத்தாலும்,அது தவறாக கையாளப்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.