ரயிலில் பயணம் செய்யும் நபர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில் புட்போட்டில் அமர்ந்து செல்லும் பயணிகளிடம் இருந்து கைபேசிகள், உடமைகளை கொள்ளையடித்து வந்த மும்பையின் பிரபல பாத்தக் குழுவின் தலைவனை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பை பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் செய்து வந்த இவர்களை பயணி ஒருவரின் வீடியோ உதவியோடு காவல்துறையினர் பிடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.


இந்த வீடியோவில் பயணி ஒருவர் தனது கைப்பேசியில் தனது பயண வழியினை படம்பிடித்து செல்கின்றார். அப்போது இவரது கைப்பேசியினை கைப்பற்ற மர்ம நபர் ஒருவர் முற்படுகின்றார். அதிர்ஷ்டவசமாக தன் கைப்பேசியினை காப்பாற்றிக்கொண்ட பயணி இந்த வீடியோ உதவியோடு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 


இந்த புகாரின் பேரில் மும்பை பகுதியை சேர்ந்த அசரப் நயீம் கான்(32) என்பரை இச்சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளனர். விசராணையில் இவர் காவல்துறையால் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல திருட்டு கும்பல் ஒன்றின் தலைவர் என தெரியவந்துள்ளது. 



இந்நிலையில் தற்போது இந்த வீடியோவினை பயணிகளின் விழிப்புணர்விற்காக மும்பை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும் பயணிகள் தங்கள் பயணத்தின் போது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.