ராஜா ரங்குஸ்கி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!
தரணிதரன் இயக்கத்தில் சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடித்துள்ள ராஜா ரங்குஸ்கி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!
தரணிதரன் இயக்கத்தில் சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடித்துள்ள ராஜா ரங்குஸ்கி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!
மெட்ரோ சிரிஷ், சாந்தினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராஜா ரங்குஸ்கி'. இன்வஸ்டிகேட்டிவ் திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் கல்லூரி வினோத், அனுபமா குமார், ஜெயக்குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தை பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய இயக்குனர் தரணிகுமார் இயக்கியுள்ளார். மிரலவைக்கும் இசையினை யுவன் சங்கர் ராஜா அளித்துள்ளார்.
வாசன் புரொடக்ஷன்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவு யுவா, படத்தொகுப்பினை ஷபிக் செய்துள்ளனர்.
முன்னதாக இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் 2 நிமிட ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!