மறக்க முடியாத அனுபவத்தை தந்த பேர் கிரில்ஸ்-க்கு நன்றி: ரஜினி
பேர் கிரில்ஸ் உடனான நிகழ்ச்சி படப்பிடிப்பில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என நடிகர் ரஜினிகாந்த் பெருமிதம்!!
பேர் கிரில்ஸ் உடனான நிகழ்ச்சி படப்பிடிப்பில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என நடிகர் ரஜினிகாந்த் பெருமிதம்!!
உலகம் முழுவதும் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சி மேன் வெர்ஸஸ் வைல்ட் ('Man vs Wild'). இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸுடன் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். பிரிட்டனை சேர்ந்த பியர் கிரில்ஸ் ஒரு முன்னாள் ராணுவ வீரர். பிரிட்டன் ராணுவத்தின் சிறப்பு அதிரடி படையில் விமானப் பிரிவில் பணியாற்றிவர்.
அந்தவகையில் ஏற்கனவே பிரதமர் மோடி, அவருடன் இணைந்து காடுகளில் பயணம் செய்த ஆவணப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த், பியர் கிரில்ஸுடன் இணைந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் ஆவணப்படத்தில் நடித்து வருகிறார்.. இந்த ஆவணப்படத்தை முப்பையைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஷூட்டிங் முடிந்த பிறகு இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பியர் கிரில்ஸ்; "பிரதமர் மோடியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது புதிய நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். #ThalaivaOnDiscovery என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பதிவிட்டுள்ளார்.இதனிடையே, பதிலளித்துள்ள ரஜினிகாந்த் 'மறக்க முடியாத அனுபவம்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "'மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. பியர் கிரில்சுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.