கிங் கோப்ரா நியூஸ்: பாம்புகளில் மிகவும் கொடிய விசம் கொண்டது ராஜநாகம். இதை ஆங்கிலத்தில் "கிங் கோப்ரா" (King Cobra) என்று அழைக்கப்படுகிறது. கிங் கோப்ரா என்று சொன்னாலே உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். குறிப்பாக கிராமத்தில், "நாகப்பாம்பு" வீட்டுக்குள்ள புகுந்து விட்டது என்று சொன்னாலே ஒரு வித பயம் உணர்வு ஏற்படும். ஏனென்றால் "நாகப்பாம்பு" என்று சொன்னாலே குலை நடக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படி நடுங்க வைக்கும் ராஜ நாகப்பாம்பை வனத்துறையினர் அசால்ட்டாக பிடித்து காட்டுக்குள் விடுகின்றனர். இதுபோன்ற பல சம்பவங்களை நாம் பாத்திருப்போம். தற்போது அதேபோன்ற ஒரு சம்பவம் ஒடிசா மாநிலத்தின் நடந்துள்ளது. கிணற்றில் விழுந்த 12 அடி நீள ராஜ நாகப்பாம்பை (12 ft King Cobra) காப்பாற்றி காட்டில் விட்டனர்.


ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள குண்டா பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து 12 அடி உயர ராஜ நாகப்பாம்பை வனத்துறையினர் நேற்று மீட்டனர்.


ALSO READ |  பாம்புக்கும் கீரிக்கும் சண்டை வந்தா எப்படி இருக்கும்: வைரல் வீடியோ


உயிருடன் மீட்டக்கப்பட்ட ராஜா நாகப்பாம்பின் உடல்நிலை பரிசோதித்து, அதன் பிறகு இயற்கை வாழ்விடத்திற்கு விடப்பட்டது என்று வன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


 



இராச நாகம் (King Cobra) அல்லது கருநாகம் என அழைக்கப்படும் பாம்பு இனம் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் அதிகமாக வசிக்கிறது. இதுவே உலகில் மிக நீளமான நச்சுப்பாம்பு (Venomous Snake) ஆகும். இது சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும்.


ALSO READ |  Video: படம் எடுத்து ஆடும் நாகப்பாம்பு ஜோடி; இது காதலா; இல்லை ஊடலா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR