நடுரோட்டில் விட்டுச்சென்ற ஓனர்.. காரின் பின்னால் ஓடிய நாய்: இணையத்தை அழ வைத்த வைரல் வீடியோ
Sad Viral Video: சமீபத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ இணையவாசிகளின் இதயத்தை பிழிந்து அவர்களை அழ வைத்துள்ளது!!
வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
சமூக ஊடகங்களில் நாய், பூனை, சிங்கம், புலி, குரங்கு ஆகிய விலங்குகளுக்கு அதிக க்ரேஸ் உள்ளது. இவற்றின் ஆக்ரோஷம், குறும்பு, மனிதர்களுடனான பிணைப்பு என இந்த விலங்குகளின் பல விதமான வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. எனினும், மனிதர்கள் இவற்றின் மீது காட்டும் பாராமுகமும், வெறுப்பும் கூட இவற்றில் காணக்கிடைக்கின்றன. இப்படிப்பட்ட சம்பவங்கள் மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கின்றன.
விலங்குகளை மனிதர்கள் துன்புறுத்தும் பிரச்சனை உலகம் முழுவதும் ஒரு தீவிர கவலையாக மாறி வருகிறது. மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை சித்திரவதை செய்யும் நிகழ்வுகளை பற்றியும் அவ்வப்போது கேள்விப்படுகிறொம். சிலர் விலங்குகளை விரும்புபவர்கள் என்று கூறிக்கொண்டு, செல்லப்பிராணியை வீட்டிற்குள் கொண்டு வந்தாலும், பின்னர் அவற்றைக் கைவிட்டு விடுகிறார்கள். மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை கைவிடுவது போன்ற பல வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகின்றன. இவை இதயத்தை நொறுக்கும் வகையில் உள்ளன.
இப்படி கைவிடப்படும் விலங்குகளில் சில அதிர்ஷ்ட விலங்குகள் வேறு சிலரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஆனால், இப்படி விடப்படும் அனைத்து விலங்குகளுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் இருப்பதில்லை. பல நேரங்களில் செல்லப்பிராணிகள் மிகவும் கஷ்டப்பட்டு இறுதியில் இறக்கின்றன. மனதை காயப்படுத்தும் அப்படி ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
நாயை விட்டுவிட்டு சென்ற நபர்
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அப்படிப்பட்ட ஒரு மனதைக் காயப்படுத்தும் தருணத்தின் வீடியோவை இந்த பதிவில் காணலாம். வீடியோவில், ஒரு நபர் ஒரு ஹைவேயில் காரை நிறுத்தி அதன் பின்புற டிக்கியை திறப்பதை காண முடிகின்றது. அதில் ஒரு பெரிய ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளது. அதை அவர் காரை விட்டு வெளியே இறக்குகிறார். நாய் வாலை அசைத்துக் கொண்டு தாய் தந்தையை பார்ப்பது போல அவரை பார்த்துக்கொண்டு இருக்கிறது. இதற்குப் பிறகு, அந்த நபர் காரின் பின்புறத்தை மூடிவிட்டு முன்னோக்கி செல்கிறார். இதற்கிடையில், நாய் கதவு வரை அவரைப் பின்தொடர்கிறது. இருப்பினும், நாய் வாலை ஆட்டிக்கொண்டு நின்றுகொண்டு இருக்க, அந்த நபர் கார் கதவை மூடி விட்டு காரை கிளப்பிக்கொண்டு சென்று விடுகிறார். நாய் வாலை ஆட்டியபடியே காரின் பின்னால் ஓடுகிறது. இந்த காட்சியை காண மிகவும் பரிதாபமாக உள்ளது.
மேலும் படிக்க | வைரல் வீடியோ: மிகப்பெரிய நீர் யானையை கொடூரமாக வேட்டையாடும் சிங்கம்..!
தன் எஜமானன் தன்னை விட்டுவிட்டு சென்றது முதலில் நாய்க்கு தெரியவில்லை. அது காரை பின்தொடர்ந்து ஓடுகிறது. பின் ஒரு கட்டத்தில் அது திடீரென நிற்கிறது. நடந்த உண்மை அதற்கு அப்போதுதான் புரிந்தது போலும். ஆனால், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் அது காரைப் பின்தொடர்ந்து ஓடுகிறது.
மனதை பாடாய் படுத்தும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:
வீடியோ இணையத்தில் வைரல் ஆனது
இந்த வீடியோப் சமூக ஊடக தளமான ட்விட்டரில், @cctvidiots என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் ஷேர்களும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
'இதைப் பார்த்தவுடன் என் இதயம் முற்றிலும் உடைந்து விட்டது' என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். 'இப்படிப்பட்டவர்கள் முதலில் நாயை தத்தெடுக்கவே கூடாது' என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | Viral Video: பறக்க மட்டும் இல்லை... குட்டிகரணமும் போடுவேன்... அசத்தும் புறா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ